இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில் கூறியிருப்பதாவது:
பிரதமர் நரேந்திர மோடியின் 2047-ம் ஆண்டில் வளர்ச்சியடைந்த பாரதம் என்ற இலக்கை நோக்கிப் பயணிக்கும் இந்தியாவில், மாணவர்கள் கல்வியில் சிறந்து விளங்கவும், தொழிலாளர்களின் தொழில் வளம் பெருகவும் ஆயுத பூஜை மற்றும் விஜயதசமி விழாக்கள் கொண்டாடப்படுகின்றன.
கல்வி, அறிவு, கலை, அறிவியல் ஆகியவற்றின் வடிவமாக விளங்கும் சரஸ்வதி தேவிக்கு நன்றி செலுத்தும் வகையில் விஜயதசமியும், தொழில் கருவிகளைப் போற்றி, தொழில் வளர்ச்சிக்காக இறைவியை வழிபடும் வகையில் ஆயுத பூஜையும் கொண்டாடப்படுகிறது. கல்வியையும் தொழிலையும் போற்றி வணங்க வேண்டும் என்பதை இவ்விழாக்கள் உணர்த்துகின்றன.
அசுர சக்திகளை வென்று பராசக்தி வெற்றிபெற்ற நாளாக விஜயதசமி கொண்டாடப்படுகிறது. இன்றைய சூழலிலும் நாட்டின் ஒற்றுமை மற்றும் பண்பாட்டைச் சீர்குலைக்க சில சக்திகள் முயற்சிப்பதாகக் குறிப்பிட்ட அவர், பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு இத்தகைய முயற்சிகளை முறியடித்து வருவதாகத் தெரிவித்துள்ளார்.
அன்னையின் அருளால் புதுச்சேரி மக்கள் எண்ணிய எண்ணங்கள் அனைத்தும் நிறைவேறவும், தொடங்கும் நற்காரியங்களில் வெற்றி கிடைக்கவும், அனைவரின் இல்லங்களிலும் கல்வி வளமும் செல்வ வளமும் பெருகவும் சரஸ்வதி தேவி மற்றும் பராசக்தி அருள்புரிய வேண்டும் எனக் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், புதுச்சேரி மாநில மக்கள் அனைவருக்கும் சரஸ்வதி பூஜை, ஆயுத பூஜை மற்றும் விஜயதசமி நல்வாழ்த்துகளை மீண்டும் தெரிவித்துக் கொள்வதாக அமைச்சர் நமச்சிவாயம் கூறியுள்ளார்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக