உளுந்தூர்பேட்டையில் பிரதம மந்திரி சூரிய மின்சக்தி திட்டம் குறித்த விழிப்புணர்வு சிறப்பு முகாம். - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

வெள்ளி, 16 அக்டோபர், 2026

உளுந்தூர்பேட்டையில் பிரதம மந்திரி சூரிய மின்சக்தி திட்டம் குறித்த விழிப்புணர்வு சிறப்பு முகாம்.


கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்தூர்பேட்டை சென்னை மெயின் ரோட்டில் உள்ள ஆதிலட்சுமி திருமண மண்டபத்தில், தமிழ்நாடு மின் பகிர்மானக் கழகம், கள்ளக்குறிச்சி மின் பகிர்மான வட்டம், உளுந்தூர்பேட்டை கோட்டம் சார்பில், மத்திய அரசின் பிரதம மந்திரி சூரிய மின்சக்தித் திட்டம் குறித்த விழிப்புணர்வு சிறப்பு முகாம் நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சிக்கு உளுந்தூர்பேட்டை கோட்டச் செயற்பொறியாளர் குமரேசன் தலைமை தாங்கினார். செயற்பொறியாளர் (பொது) மின் பகிர்மான அலுவலகத்தைச் சேர்ந்த முத்துக்குமாரசாமி முன்னிலை வகித்தார்.

முகாமில், மின்சாரத் தேவையைக் குறைக்கும் நோக்கில் பொதுமக்கள் தங்களது வீடுகளின் மேற்கூரைகளில் சூரிய மின்சக்தித் தகடுகளை அதிக அளவில் நிறுவ முன்வர வேண்டும் என வலியுறுத்தப்பட்டது. மேலும், இத்திட்டத்தின் கீழ் மத்திய, மாநில அரசுகள் வழங்கும் மானிய உதவிகளைப் பயன்படுத்தி, சூரிய மின்சக்தி உற்பத்தி முறையை வீடுகளில் அமைத்துப் பயன்பெறலாம் என்றும் எடுத்துரைக்கப்பட்டது.

இந்த முகாமில், மேற்கூரை சூரிய மின்சக்தித் தகடுகளை நிறுவும் நிறுவனங்களின் பிரதிநிதிகள், பல்வேறு வங்கிகளின் கிளை மேலாளர்கள், மின்துறை அதிகாரிகள், பணியாளர்கள், வியாபாரிகள், தன்னார்வலர்கள் மற்றும் பொதுமக்கள் என 200-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

நிகழ்ச்சியின் முடிவில், உளுந்தூர்பேட்டை உதவிச் செயற்பொறியாளர் அசோக்குமார் நன்றி கூறினார்.

D.செல்வம்
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்தியாளர் 
தமிழக குரல் 
கள்ளக்குறிச்சி மாவட்ட இணையதள செய்தி பிரிவு

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad