குடியாத்தத்தில் விவசாயிகள் குறைதீர்வு நாள் கூட்டம்! பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி விவசாயிகள் மனு !
குடியாத்தம், அக்டோபர் 9-
வேலூர் மாவட்டம், குடியாத்தம் வட்டாட்சி யர் அலுவலகத்தில் அக்டோபர் மாதத்திற் கான விவசாயிகள் குறைதீர்வு நாள்
கூட்டம் இன்று காலை நடைபெற்றது.
இக்கூட்டத்திற்கு வட்டாட்சியர் பிரியா தலைமை தாங்கினார். வேளாண்மை உதவி இயக்குநர் உமாசங்கர் முன்னிலை வகித்தார். தலைமையிடத்து துணை வட்டாட்சியர் தனலட்சுமி வரவேற்புரை ஆற்றினார். இக்கூட்டத்தில் கலந்து கொண்ட விவசாய சங்கப் பிரதிநிதிகள், விவசாயம் மற்றும் பொதுமக்களின் அடிப் படை வசதிகள் தொடர்பான பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்தனர். குறிப் பாக, 100 நாள் வேலைத் திட்டப் பணி யாளர்களுக்கு வழங்க வேண்டிய கூலி நிலுவையில் இருப்பதாகவும், விவசாயி களுக்குச் சொட்டுநீர்ப் பாசன வசதிகளை ஏற்படுத்தித் தர வேண்டும் என்றும் கோ ரிக்கை விடுத்தனர். மேலும், தற்போது நிறுத்தி வைக்கப்பட்டுள்ள உழவர் பாது காப்பு அட்டைகளை மீண்டும் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலி யுறுத்தினர். குடியாத்தம் பகுதியில் நூல கத்திற்கு எதிரே மழைநீரும் கழிவுநீரும் தேங்கிக் கிடப்பதால் பொதுமக்கள் அவதிக்குள்ளாவதாகவும், அகரம்சேரி–குடியாத்தம் சாலை மற்றும் சின்னசேரி சாலையைச் சீரமைக்க வேண்டும்என்றும் கோரிக்கை முன்வைத்தனர். குடியாத்தம் வட்டாட்சியர் அலுவலகத்தில் உள்ள கழிவறை முறையாகப் பராமரிக்கப்படா மல் இருப்பதாகவும், அதனைச் சீரமைத் துப் பராமரிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் விவசாயிகள் தெரிவி த்தனர்.இதனைத் தொடர்ந்து, தங்களின் பல்வேறு கோரிக்கைகள் தொடர்பாக வட்டாட்சியர் பிரியாவிடம் விவசாயிகள் கோரிக்கை மனுக்களை அளித்தனர். மனுக்களைப் பெற்றுக்கொண்ட வட்டாட் சியர், கோரிக்கைகள் குறித்து உரிய நடவ டிக்கை எடுப்பதாக உறுதி அளித்தார்
குடியாத்தம் தாலுகா செய்தியாளர் கே வி ராஜேந்திரன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக