வேலூர் மாவட்டம் வேலூர் ஓட்டேரி பகுதி யில்.போதை மாத்திரை விற்பனை செய்த பேர் கைது !
வேலூர் , அக்டோபர் 13 -
வேலூர் மாவட்டம்வேலூர் ஓட்டேரி அருகே போதை மாத்திரை விற்ற சென்னையைச் சேர்ந்த 2 பேர் கைது செய்து அவர்களிட மிருந்து 56 டேபண்டல் போதை மாத்திரை கள், 5 சிரிஞ்சுகள் மற்றும் இருசக்கர வாகனம் பறிமுதல். - பள்ளி, கல்லூரி மாணவர்களைக் குறிவைத்து விற்பனை யா என போலீசார் விசாரணை.
வேலூர் ஓட்டேரி அருகே வானியங்குளம் பகுதியில் உள்ள கன்னிக்கோவில் அருகே வேலூர் பாகாயம் காவல்துறையி னர் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர் அப்போது அவ்வழியாக இருசக்கர வாக னத்தில் சந்தேகத்திற்கிடமாகநின்றிருந்த இருவரைப் பிடித்து விசாரித்தபோது அவர்கள் முன்னுக்குப் பின் முரணாகப் பேசியதால் இருவரையும் சோதனை செய்ததில் அரசால் தடை செய்யப்பட்ட 56 டேபேண்டடால் போதை மாத்திரைகளும், ஐந்து சிரிஞ்சுகளும் விற்பனை செய்வ தற்காக வைத்திருந்ததை கண்டுபிடிக்கப் பட்டது.பின்னர் அவர்களிடம் நடத்தியவிசாரணையில், அவர்கள் சென்னை மயிலாப்பூர் பகுதியைச் சேர்ந்த விக்கி (எ) விக்னேஷ் (வயது 29) மற்றும் தினேஷ் (வயது 23) என்பது தெரியவந்தது. இதையடுத்து இருவர் மீதும் போதை மாத்திரை கடத்தல் வழக்கு பதிவு செய்து. அவர்கள் ஓட்டி வந்த இருசக்கர வாகனத் தையும் பறிமுதல் செய்து இருவரையும் கைது செய்தனர். பின்னர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட இருவரும் வேலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.
இந்த சம்பவம் நடந்த பகுதியின் அருகே அரசு கலைக் கல்லூரி மற்றும் பள்ளிகள் செயல்பட்டு வருகின்றன. எனவே, பள்ளி, கல்லூரி மாணவர்களைக் குறிவைத்து இந்தப் போதை மாத்திரை கும்பல் செயல் படுகிறதா என்ற கோணத்தில் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
குடியாத்தம் செய்தியாளர் கேவி ராஜேந்திரன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக