அரசுப் பள்ளி ஆசிரியர் மத அமைப்பின் நிர்வாகப் பொறுப்பில் பதவி வகிப்பதாக புகார் – நடவடிக்கை கோரி மாவட்ட ஆட்சியரிடம் மனு !
திருப்பத்தூர் , நவம்பர் 23 -
திருப்பத்தூர் மாவட்டம் அரசுப் பள்ளியில் பணிபுரியும் பட்டதாரி ஆசிரியர் ஒருவர், கல்வித் துறையின் முன் அனுமதி பெறா மல் மத அமைப்பின் நிர்வாகப் பொறுப் பில் பதவி வகித்து வருவதாகக் கூறி, உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்கப்பட்டுள்ளது.ஆம்பூர் பகுதி யைச் சேர்ந்த ஓய்வுபெற்ற ஆசிரியர் எல்.எஸ். தேவகுமார் என்பவர் அளித்து ள்ள மனுவில், மாதனூர் ஒன்றியம், தேவ லாபுரம் அரசு மேல்நிலைப்பள்ளியில் பட்டதாரி ஆசிரியராகப் பணிபுரியும் எஸ். கார்த்தின் சத்தீஷ் பிரேம்குமார் என்பவர், ஆம்பூர் இம்மானுவேல் லுத்தரன் கிறிஸ் தவ ஆலயத்தின் கீழ் செயல்படும் இந்தி யன் எவாஞ்சலிக்கல் லுத்தரன் சர்ச் அமைப்பின் 2026–2028ஆம்ஆண்டுக்கான நிர்வாகத் தேர்தலில் போட்டியிட்டு செய லாளராகத் தேர்வு செய்யப்பட்டு பதவி வகித்து வருவதாகக் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், அரசு ஊழியர்களுக்கான நடத் தை விதிகளுக்கு முரணாக இந்தப் பதவி யை வகிப்பது தொடர்பாக உரிய விசார ணை நடத்த வேண்டும் என்றும், கல்வித் துறையின் முன் அனுமதி பெறாமல் நிர் வாகப் பொறுப்பில் செயல்பட்டது குறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் மனுவில் வலியுறுத்தியுள்ளார். இந்த விவகாரம் தொடர்பாக ஏற்கனவே அளிக் கப்பட்ட மனு மீது 80 நாட்களுக்கும் மேலா கியும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை எனவும், சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய விசாரணை மேற்கொண்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் மாவட்ட நிர் வாகத்திடம் கோரிக்கை விடுத்துள்ளார்.
அரசுப் பள்ளி ஆசிரியர்கள் அரசு ஊழியர் களுக்கான நடத்தை விதிகளைப் பின் பற்றுகிறார்களா என்பதை உரிய முறை யில் விசாரித்து, தவறு இருப்பின் நட வடிக்கை எடுக்க வேண்டும் என்பதே மனுதாரரின் கோரிக்கையாக உள்ளது.
மாவட்ட செய்தியாளர்.
மோ. அண்ணாமலை.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக