செங்கால் ஓடையில் அகற்றப்படாமல் உள்ள காய்ந்த முப்புதர்கள் மழைக்காலங்களில் நீர்வழிப் பாதையில் அடைப்பு ஏற்படும் அபாயம். - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

சனி, 14 நவம்பர், 2026

செங்கால் ஓடையில் அகற்றப்படாமல் உள்ள காய்ந்த முப்புதர்கள் மழைக்காலங்களில் நீர்வழிப் பாதையில் அடைப்பு ஏற்படும் அபாயம்.


கடலூர் மாவட்டம் வடலூர் குறிஞ்சிப்பாடி சாலையில் ராசாகுப்பம் அருகே செங்கால் ஓடை அமைந்துள்ளது 
என்எல்சி சுரங்கம் 1 ஏ பகுதியிலிருந்து வெளியேற்றப்படும் நீர் கன்னி கோவில் பாலம் செங்கால் ஓடை பரவனாறு வழியாக பெருமாள் ஏரி சென்றடைகிறது இதன் மூலம் குறிஞ்சிப்பாடி சுற்றுவட்டார பகுதியைச் சேர்ந்த விவசாயிகள் பாசன வசதி பெற்று வருகின்றனர்.

இந்நிலையில் செங்கல் ஓடையில் காய்ந்த நிலையில் கருவேல மரங்கள் மற்றும் முட்புதர்கள் அகற்றப்படாமல் உள்ளதாக விவசாயிகள் தெரிவிக்கின்றனர் பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கடலூர் மாவட்ட ஆட்சித் தலைவரின் அறிவுறுத்தலின் பெயரில் செங்கால் ஓடையின் இருபுறமும் உள்ள சீமை கருவேல மரங்கள் மற்றும் முட்புதர்கள் அகற்றப்பட்டு சுத்தம் செய்யப்பட்டது இந்நிலையில் செங்கால் ஓடை பாலத்திற்கு கீழ்ப்பகுதியில் முறையாக சுத்தம் செய்யும் பணி மேற்கொள்ளப்படாமல் உள்ளதால் மழைக்காலங்களில் மழைநீர்வழிப் பாதையில் அடைப்பு ஏற்பட்டு மழை நீர் செல்வதில் சிரமம் ஏற்படும் என விவசாயிகள் வேதனை தெரிவிக்கின்றனர்
மேலும் அகற்றப்பட்ட முட்புதர்கள் மற்றும் கருவேல மரங்கள் செங்கால் ஓடையிலேயே காய்ந்த நிலையில் முறையாக அப்புறப்படுத்தாமல் தேக்கமடைந்து உள்ளதால் மழைக்காலங்களில் என்எல்சி சுரங்கத்திலிருந்து வெளியேற்றப்படும் மழை நீர் முறையாக வெளியேற்றப்படுவதில் சிக்கல் ஏற்படும் எனவும் இதனால் மழைநீர் விவசாய நிலங்களில் புகும் அபாயம் உள்ளதாக விவசாயிகள் வேதனை தெரிவிக்கின்றனர்
எனவே செங்கால் ஓடை பகுதியில் காய்ந்த நிலையில் உள்ள முட்புதர்கள்
மற்றும் சீமை கருவேல மரங்கள் உள்ளிட்டவைகளை விரைந்து அகற்ற நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என விவசாயிகள் மாவட்ட நிர்வாகத்திற்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad