குடியாத்தம் நல்லம்மை இராமநாதன் மருத்துவமனை மற்றும் ரோட்டரி சங்கத் தின் இலவச கண் மருத்துவ முகாம் ! - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

சனி, 14 நவம்பர், 2026

குடியாத்தம் நல்லம்மை இராமநாதன் மருத்துவமனை மற்றும் ரோட்டரி சங்கத் தின் இலவச கண் மருத்துவ முகாம் !

குடியாத்தம் நல்லம்மை இராமநாதன் மருத்துவமனை மற்றும்  ரோட்டரி சங்கத் தின் இலவச கண் மருத்துவ முகாம் !
குடியாத்தம். நவம்பர் 14 -
வேலூர் மாவட்டம் குடியாத்தம் ரோட்டரி சங்கம், நல்லம்மை இராம நாதன் மருத் துவமனை மற்றும் கோவை சங்கரா கண் மருத்துவமனை இணைந்து ஏற்பாடு செய்த கண் சிகிச்சை முகாம் ரோட்டரி சங்க கட்டிடத்தில் இன்று காலை 9 மணி முதல் பிற்பகல் 1 மணி வரை நடை பெற்றது சங்கத் தலைவர் டி எஸ் ரவிச் சந்திரன் தலைமை வகித்தார். ஆளுநர் தேர்வு 2029 -30 கே.கிஷன்சந்த், முன்னாள் ஆளுநர் ஜே .கே .என் பழனி, வழக்கறிஞர் கே. எம் .பூபதி சிறப்பு அழைப்பாளர்களா கக் கலந்து கொண்டு முகாமைத் துவக்கி வைத்தார்கள். முகாம் கொடையாளர்கள் ஜி .வடிவேல், மீனலோச்சனா, வி கபாலீஸ் வரன், நதியா, வழக்கறிஞர் வி. ரஞ்சித் குமார், திருச்செல்வி குடும்பத்தினர் கண் மருத்துவர்களை கௌரவித்து பாராட்டி னார்கள் இம்முகாமில் மொத்தம் 310 பேர் கலந்து கொண்டார்கள். அவர்களுக்கு கண் பார்வை பரிசோதிக்கப்பட்டு 79 பேர் கண் அறுவை சிகிச்சைக்கு தேர்ந்தெடுக் கப்பட்டு அனுப்பப்பட்டனர். முகாமில் முன்னாள் தலைவர்கள் என். சத்திய மூர்த்தி, பப்ளிக் இமேஜ் சேர்மன் சி .கே. வெங்கடேசன், எஸ். வேல்முருகன், ஆர். அன்பு, பி .எல். என்.பாபு,வி.என். அண்ணா மலை, ஆர்.வி .ஹரி கிருஷ்ணன்,சி. கண் ணன், கே. சந்திரன், எம் .ஆர். மணி, சி.பி. மகாராஜன், எஸ். பரசுராமன், பெரிய கோடீஸ்வரன், ரவிக்குமார், திருநாவுக் கரசு, நேரு, ஜம்புலிங்கம், பாலமுருகன், பிரஸ் ஜெ. தமிழ்ச்செல்வன், பாலசுப்ர மணியம், சரத் குமார், பாலாறு மருத்து வமனை நிர்வாகி ஆடிட்டர் எஸ் .மோகன், திருவண்ணாமலை வேங்கிக்கால் ரோட்டரி சங்க நிர்வாகிகள் வி. பானுச் சந்தர், தாமஸ் ஜெயபாலன் மற்றும் பலர் கலந்து கொண்டனர். முகாமுக்கு வருகை தந்த பயனாளிகளுக்கு அன்னமிட்டு மகிழ் திட்டத்தின் கீழ் காலை உணவு மற்றும் மதிய உணவை வழக்கறிஞர் ரஞ்சித் குமார் குடும்பத்தினர் வழங்கி னார்கள். முகாமுக்கான ஏற்பாடுகளை முகாம் தலைவர் என். ஜெயச்சந்திரன், செயலர் எஸ். பார்த்திபன், சங்கரா கண் மருத்துவமனை பொறுப்பாளர் அன்பர சன் ஆகியோர் செய்திருந்தார்கள் இறுதி
யில் சங்க செயலாளர் ஜெ. தமிழ்ச் செல்வன் நன்றி உரையாற்றினார்.

 குடியாத்தம் தாலுகா செய்தியாளர் கே வி ராஜேந்திரன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad