லிட்டில் பிளவர் மெட்ரிகுலேஷன் பள்ளி யில் ஜவஹர்லால் நேரு அவர்களின் 137 வது பிறந்தநாள் குழந்தைகள் தின கொண்டாட்டம்.! - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

சனி, 14 நவம்பர், 2026

லிட்டில் பிளவர் மெட்ரிகுலேஷன் பள்ளி யில் ஜவஹர்லால் நேரு அவர்களின் 137 வது பிறந்தநாள் குழந்தைகள் தின கொண்டாட்டம்.!

லிட்டில் பிளவர் மெட்ரிகுலேஷன் பள்ளி யில் ஜவஹர்லால் நேரு அவர்களின் 137 வது பிறந்தநாள் குழந்தைகள் தின கொண்டாட்டம்.!
 குடியாத்தம். நவம்பர் 14 -
வேலூர் மாவட்டம் குடியாத்தம் புவனேஸ் வரி பேட்டை லிட்டில் பிளவர் மெட்ரிகு லேஷன் பள்ளியில் இந்திய தாய் திரு நாட்டின் முதல் பிரதமர் பண்டித ஜவஹர் லால் நேரு அவர்களின் 137-வது பிறந்த நாள் விழா 
குழந்தைகள் தினம் வெகு சிறப்பாக கொண்டாடப்பட்டது. விழாவிற்கு பள்ளி யின் செயலர் S.ரம்யா கண்ணன் அவர் கள் முன்னிலை வகிக்க பள்ளியின் தாளாளர் V.சடகோபன் அய்யா அவர்கள் தலைமையில், சிறப்பு அழைப்பாளர் களாக ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியர் தேவராஜ்அவர்களும், நல்லாசிரியர் விருது பெற்ற வேலூர் மாவட்ட விளையா ட்டு துறை இணை இயக்குனர் உடற் கல்வி ஆசிரியர் P.புனிதவதி அவர்களும், பள்ளி கல்வித்துறையில் பணியாற்றி ஓய்வு பெற்ற சிறார் எழுத்தாளர் கதை சொல்லி அய்யா நீதிமணி அவர்களும் ஓய்வுபெற்ற ஆங்கில ஆசிரியர் தனபால அவர்களும் கலந்து கொண்டு கல்வி, ஒழுக்கம், விளையாட்டு புத்தக வாசிப்பு குறித்தும் மாணவர்களுக்கு விழிப்பு ணர்வு உரை நிகழ்த்தினார். விழாவில் பள்ளியின் மழலை வகுப்பு குழந்தை களின் விலங்குகள், பறவைகள், காய் கறிகள், தேச தலைவர்கள்  அடங்கிய மாறுவேட அணிவகுப்பும், ஆசிரியர் களின் தொலைபேசி குறித்த விழிப்பு ணர்வு நாடகமும், மாணவ மாணவிகளின் ஆங்கில மற்றும் தமிழில் குழந்தைகள் தினம் குறித்த உரை வீச்சும், உரையாட லும் சிறப்பாக நடைப்பெற்றது. விழாவின் வரவேற்புரையாக பள்ளியின் முதல்வர் P.சாந்தி அவர்கள் அனைவரையும் வர வேற்றார். விழாவினை பள்ளியின் ஆசிரி யை R.அஸ்வினி அவர்கள் ஒருங்கிணை க்க பள்ளியின் ஆசிரியை L.ரேணுகா அவர்கள் தொகுத்து வழங்கினார். இறுதி யாக பள்ளியின் ஆசிரியை G.பவித்ரா அவர்கள் நன்றியுரை ஆற்றினார். குழந் தைகள் தினத்தை முன்னிட்டு பள்ளி குழந்தைகளுக்கு இனிப்பு மற்றும் மரக் கன்றுகள் வழங்கப்பட்டது.

 குடியாத்தம் தாலுகா செய்தியாளர் கே வி ராஜேந்திரன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad