ஊட்டியில் திமுக அரசின் 1 ஆண்டு நிறைவு கொண்டாட்டம். - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

சனி, 7 மே, 2022

ஊட்டியில் திமுக அரசின் 1 ஆண்டு நிறைவு கொண்டாட்டம்.

நீலகிரி மாவட்டம்,  ஊட்டி நகர திமுக சார்பில் திராவிட முன்னேற்றக் கழக தலைவரும், தமிழக முதல்வருமான மாண்புமிகு மு .க. ஸ்டாலின் அவர்கள் தலைமையில் ஆட்சி பொறுப்பேற்று மிக சிறப்பான முறையில் ஆட்சி 1- வருடம் முடிவுற்ற நிலையில், இதனைத் தொடர்ந்து ஊட்டி நகர செயலாளர் எஸ்.ஜார்ஜ் அவர்கள் தலைமையில் 800-க்கும் மேற்பட்டோர்களுக்கு ஊட்டி நொண்டி மேடு பகுதியில் மாண்புமிகு தமிழக தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டு துறை அமைச்சர் திரு.சி.வெ.கணேசன் அவர்கள் மற்றும்  நீலகிரி மாவட்ட கழக செயலாளர் திரு. பா.மு. முபாரக் அவர்கள் கலந்துகொண்டு நிகழ்ச்சியை சிறப்பித்து பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்கள்.  

இந்நிகழ்ச்சியை ஊட்டி நகரமன்ற உறுப்பினர்  ஜோ.செல்வராஜ் ஏற்பாடு செய்தார். இந்நிகழ்ச்சியில் மாவட்ட துணைச் செயலாளர் ஜே.ரவிக்குமார், தலைமைச் செயற்குழு உறுப்பினர்கள் ஆர்.இளங்கோவன், செந்தில் ,ரங்கராஜ், கே.எம்.ராஜு, கே.ஏ. முஸ்தபா, மாவட்ட பொருளாளர் நாசர் அலி, ஊட்டி நகராட்சி தலைவர் தலைவர்  எம் .வாணிஸ்ரீ ,  தலைமைப் பொதுக்குழு உறுப்பினர் சதக்கத்துல்லா ஆகியோர் முன்னிலை வகித்தனர். 
இந்நிகழ்ச்சியில் நகர அவைத்தலைவர் ச.ஜெய கோபி,  கார்டன் கிருஷ்ணன்,  மஞ்சு குமார்,  சுரேஷ், காந்தல் சம்பத்,  ஸ்டீபன்,  தியாகு, சீனிவாசன், கார்த்திக், ரகுபதி-M.C, அப்பாஸ், வின்சென்ட் ரவிக்குமார், வினோத்குமார், ஸ்டான்லி், நீல் ஆம்ஸ்ட்ராங்,  நாகராஜ், மகளிர் அணியைச் சார்ந்த நிர்மலா மேரி, ஜெயராணி, மாகி, சரோஜா, ரெஜினா மேரி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad