பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவிக்கும் இலங்கை மக்களுக்கு ரூ 5 லட்சம் நிதியுதவி தேமுதிக தலைவர் திரு. விஜயகாந்த் அறிவிப்பு, முதல்வரின் பொது நிவாரண நிதிக்கு ரூ 5 லட்சம் வழங்கப்படும் என தேமுதிக தலைவர் விஜயகாந்த் அறிக்கை வெளியிட்டுள்ளார்.
அந்த அறிக்கையில் அவர் கூறியுள்ளதாவது : இலங்கையில் நிலவிவரும் பொருளாதார நெருக்கடியால் பெட்ரோல், டீசல், காய்கறி உள்ளிட்ட அனைத்து அத்தியாவசிய பொருட்களின் விலை வரலாறு காணாத வகையில் பல மடங்கு உயர்ந்துள்ளது.
இதனால் வாழ்வாதாரத்தை இழந்து தவித்து வரும் இலங்கை மக்கள் பொருளாதார நெருக்கடியை கட்டுப்படுத்தக் கோரி அந்நாட்டு அதிபர் மற்றும் பிரதமருக்கு எதிராக பலகட்ட போராட்டங்களை நடத்தி வருகின்றனர் மேலும் பொருளாதார நெருக்கடியால் இலங்கையிலுள்ள தமிழக மக்கள் அகதிகளாக தமிழ்நாட்டுக்கு வந்த வண்ணம் உள்ளார்கள். உன்ன உணவு உடுத்த உடை மற்றும் மருத்துவ வசதி இல்லாமல் இலங்கை மக்கள் மிகவும் கஷ்டப்பட்டு வருகின்றனர்.
இந்தக் கடினமான நேரத்தில் அவர்களுக்கு உதவிட வேண்டியது நம் ஒவ்வொருவரின் கடமை அந்த வகையில் இலங்கையில் வாழும் மக்களின் துயர் துடைக்கவும் அவர்களுக்கு உதவிடும் வகையிலும் தமிழக முதல்வரின் பொது நிவாரண நிதிக்கு தேமுதிக சார்பில் ரூ 5 லட்சம் நிதி வழங்கப்படும் என்று குறிப்பிட்டுள்ளார்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக