மறைந்த சமூகப் போராளி டாக்டர் டிராபிக் ராமசாமி அவர்களின் முதலாம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்ச்சி தமிழ்நாடு பத்திரிகையாளர் சங்கத்தின் தலைவர் தோழர் டி.எஸ்.ஆர். சுபாஷ் அவர்களின் முன்னிலையில் மூத்த பத்திரிகையாளர் மற்றும் ஆம் ஆத்மி கட்சியின் தமிழகத் தலைவர் தோழர் எஸ்.ஏ.என். வசீகரன் அவர்கள் தலைமையில் நடைபெற்றது.
இதில் தோழர்கள் மதிஒளி ராஜா, கலைஞர் கணேசன், ஆம் ஆத்மி ஸ்டெல்லா, சமூக ஆர்வலர் மற்றும் நடிகை கீத்து(முத்துநகை), வழக்கறிஞர் பாரி கோபால், திருவள்ளூர் சுந்தரமூர்த்தி டிராபிக் ராமசாமி அவர்களின் உதவியாளர் கணேஷ், மணிகண்டன், ஆம் ஆத்மி வினோத் மற்றும் பலர் கலந்து கொண்டு மலர் அஞ்சலி செலுத்தினர். பள்ளிக்கரணை பாபு, வி.ராம்குமார் ஆகியோர் இந்த நிகழ்ச்சியினை ஏற்பாடு செய்திருந்தார்கள்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக