தேனி பெரியகுளத்தில் 61வது அகில இந்திய கூடைப்பந்துப் போட்டி. - தமிழக குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

ஞாயிறு, 15 மே, 2022

தேனி பெரியகுளத்தில் 61வது அகில இந்திய கூடைப்பந்துப் போட்டி.

பெரியகுளம் சில்வர் ஜீபிலி ஸ்போர்ட்ஸ் கிளப் நடத்தும் 61 ஆம் ஆண்டு கூடை பட்டந்தாட்ட போட்டி முதல் போட்டியில் திருநெல்வேலி பி எ எ கே அணி  52 - 37 என்ற புள்ளியின் அடிப்படையில் பெரிய குளம் அணியை வென்றது.

தேனி மாவட்டம் பெரியகுளத்தில் பெரியகுளம் சில்வர் ஜீபிலி  ஸ்போர்ட்ஸ் கிளப் நடத்தும் அமரர் சிதம்பர சூரியநாராயணன் நினைவு சுழற் கோப்பைக்கான 61 வது  அகில இந்திய கூடைப்பந்துப் போட்டி நடைபெற்று வருகிறது. இந்திய அளவில் தலை சிறந்த அணிகளான இந்திய விமான படை டெல்லி அணி. இந்திய கடற்படை லோனாவாலா அணி தென் கிழக்கு மத்திய ரயில்வே பிலாஸ்பூர் அணி இந்தியன் வங்கி சென்னை அணி விளையாட்டு விடுதி சென்னை அணி மற்றும் கேரளா மின்வாரியம் அணி உள்ளிட்ட 24 அணிகள் பங்கேற்கின்றனர்.

இதில் முதலாவது போட்டியாக திருநெல்வேலி பி.எ.எ.கே. கூடைப்பந்தாட்ட அணி மற்றும் பெரியகுளம் சில்வர் ஜூபிலி  விளையாட்டுக் கழகம் ஆகிய இரண்டு அணிகள் இன்று பங்கேற்றனர், இதில் திருநெல்வேலி பிஏஏகே.அணி 52-37 என்ற புள்ளிகள் பெற்று வெற்றிபெற்றது.

இரண்டாவது போட்டியாக ராமநாதன் கூடைபந்தாட்ட கழகம் கும்பகோணம் மற்றும் பெரியகுளம் சில்வர்  ஜீபிலி கிரீன்ஸ் அணி விளையாடி வருகிறது, முன்னதாக விளையாட்டு போட்டியை பெரியகுளம் நகர்மன்றத் தலைவர் ஸ்மிதா சிவக்குமார் கொடியேற்றி துவக்கி வைத்தார்.. சிறப்பு விருந்தினராக பெரியகுளம் சார் ஆட்சியர் ரிஷப்  கலந்து கொண்டார்

நடைபெற்று வரும் கூடைப்பந்து போட்டியில் நாக்அவுட் மற்றும் லீக் சுற்றில் அணிகள் தேர்வு செய்யப்பட்டு பரிசுகள் வழங்க உள்ளனர். இதில் முதல் பரிசு அமரர் PD.சிதம்பர சூரியநாராயணன் சுழற்கோப்பை  மற்றும் ரொக்க பரிசு 50,000 இரண்டாம் பரிசு 40,000 மூன்றாம் பரிசு 30,000 நான்காம் பரிசு 20,000  பரிசுகள் வழங்க சிறந்த விளையாட்டு வீரருக்கான பரிசு ஹீரோ ஹெச் எஸ் 100 பைக் பரிசாக வழங்கப்பட உள்ளது மேலும் சிறப்பு விருதுகளும் வழங்கபட உள்ளன. 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad

*/