சிதம்பரம் நடராஜர் கோயிலில் அதிகாரிகள் ஆய்வு செய்ய மறுத்தவர்கள் மீது சட்டபூர்வ நடவடிக்கை எடுக்கப்படும் என்று இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு தெரிவித்துள்ளார். சேனனி ராயப்பேட்டையில் சித்தி புத்தி விநாயகர் கோயில் மற்றும் பெரியபாளையத்து அம்மன் கோயில்களில் திருப்பணிகள் மேற்கொள்வது குறித்து அமைச்சர் சேகர் பாபு ஆய்வு மேற்கொண்டார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர் சிதம்பரம் நடராஜர் கோயில் விவகாரம் குறித்து விசாரணை மேற்கொள்ள துணை ஆணையர் தலைமையில் அமைக்கப்பட்ட குழுவினர் நேரடியாக சென்று விசாரணை செய்ய அனுமதி மறுக்கப்பட்டுள்ளது என்றார். அதிகாரிகளை ஆய்வு செய்ய மறுக்கப்பட்டது தொடர்பாக சட்ட பூர்வமாக நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அமைச்சர் சேகர்பாபு கூறியுள்ளார்.
பட்டினப்பிரவேசம் நிகழ்வுக்கு பயத்தின் அடிப்படையில் அனுமதி வழங்கப்படவில்லை என்றும், முன்கூட்டியே திட்டமிடப்பட்ட நிகழ்வு என்பதால் ஆதீனங்கள் கோரிக்கைக்கு ஏற்ப அனுமதி வழங்கப்பட்டது என்றும் அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார். எதிர்காலங்களில் பட்டினப்பிரவேசம் போன்ற நிகழ்வுகளுக்கு சூழ்நிலைக்கு ஏற்ப முடிவு செய்யப்படும் என்றும் அவர் கூறியுள்ளார்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக