தேசிய அளவில் முதல் பரிசு பெற்றதற்காக பழங்குடியினர் பெண்களுக்கு பாராட்டு. - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

ஞாயிறு, 15 மே, 2022

தேசிய அளவில் முதல் பரிசு பெற்றதற்காக பழங்குடியினர் பெண்களுக்கு பாராட்டு.

மாண்புமிகு தமிழக முதலமைச்சர் திரு மு க ஸ்டாலின் அவர்களை தலைமை செயலகத்தில் இந்தியாவின் எழுச்சி 75ஆம் ஆண்டு சுதந்திர அமுத பெருவிழாவை முன்னிட்டு ஒன்றிய அரசின் பழங்குடியினர் விவகார அமைச்சகத்தின் சார்பில் ஒடிசா மாநிலம் புவனேஸ்வரில் நடைபெற்ற 50 ஆவது தேசிய அளவிலான பழங்குடியினர் கைவினைப் பொருட்கள் விற்பனை விழாவில் தோடர் பழங்குடியினர் பூத்தையல் தேசிய அளவில் முதல் பரிசு பெற்றதற்காக இவ்விழாவில் கலந்து கொண்ட தோடர் பழங்குடியினர் பெண்கள் மற்றும் பழங்குடியினர் ஆய்வு மைய இயக்குனர் (பொறுப்பு) முனைவர் ச. உதயகுமார் ஆகியோர் சந்தித்து வாழ்த்து பெற்றனர்.


இந்த நிகழ்ச்சியில் ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் கயல்விழி செல்வராஜ் அவர்களும் உடன் பழங்குடியினர் நலத்துறை முதன்மைச் செயலாளர் டாக்டர் மணிவாசன் இ.ஆ.ப அவர்களும் ஆதிதிராவிட நலத்துறை ஆணையர் திருமதி சோ.மதுமதி இ.ஆ.ப அவர்களும் பழங்குடியினர் நலத்துறை இயக்குனர் திரு எஸ் அண்ணாதுரை அவர்களும் மற்றும் அரசு உயர் அதிகாரிகளும் கலந்து கொண்டனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad