நாமக்கல் மாவட்டம், இராசிபுரம் சட்டமன்ற தொகுதியில் உள்ள வெண்ணந்தூர் பேரூராட்சி பகுதியில் நாடாளுமன்ற உறுப்பினர் ஏ .கே. பி . சின்ராஜ் அவர்கள் தலைமையில் மக்கள் குறை தீர்க்கும் முகாம் நடைபெற்றது. இந்த முகாமில் தேமுதிக மாவட்ட செயலாளர் டி.எஸ். விஜய் சரவணன் அவர்கள் தலைமையில் மனு வழங்கப்பட்டது.
இந்த மனுவில் ராசிபுரம் சட்டமன்றத் தொகுதியில் பல்வேறு இடங்களில் கல்குவாரி கனிம வளங்கள் அரசு அனுமதி இல்லாமல் எடுத்து பல லட்சங்களுக்கு கொள்ளை போய்க் கொண்டிருக்கிறது இதை உடனே தடுத்து நிறுத்த வேண்டும் என்று தேமுதிக மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மனு வழங்கும் விழாவில் மாவட்ட தேமுதி கழக அவைத் தலைவர் சௌந்தரராஜன், மாநில ஆசிரியர் பட்டதாரி அணி துணை செயலாளர் செல்வராஜ், மாவட்ட தேமுதி கழக துணை செயலாளர் சக்திவேல், வெண்ணந்தூர் ஒன்றிய தேமுதி கழக செயலாளர் முருகானந்தம், வெண்ணந்தூர் பேரூர் தேமுதி கழக செயலாளர் கிரி, ராசிபுரம் கிழக்கு ஒன்றிய செயலாளர் வேல்முருகன், நாமகிரிப்பேட்டை ஒன்றிய தேமுதி கழக செயலாளர் வேல்முருகன், மாநில செயற்குழு உறுப்பினர் பாலச்சந்தர், மாவட்ட நெசவாளர் அணி துணை செயலாளர் ரமேஷ், மாவட்ட விவசாய அணி துணை செயலாளர் கோபால் , மாவட்ட இளைஞரணி துணை செயலாளர் பழனிச்சாமி, ராசிபுரம் நகர கழக துணை செயலாளர் நடராஜன், ராசிபுரம் நகர கழக நிர்வாகி செங்கோட்டுவேல், நாமகிரிப்பேட்டை நிர்வாகிகள் தமிழ், வெண்ணந்தூர் ஒன்றிய இளைஞர் அணி செயலாளர் சரவணன், கேப்டன் மன்றம் வடிவேல் வெண்ணந்தூர் வெண்ணந்தூர் பேரூர் அவைத் தலைவர் ராஜமாணிக்கம், ஒன்றிய துணை செயலாளர் அருண், நாமகிரிப்பேட்டைஒ ன்றிய தமிழ்ச்செல்வன் மற்றும் 50க்கும் மேற்பட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக