திருவாரூரில் சங்கீத மும்மூர்த்திகள் ஜெயந்தி விழா. - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

செவ்வாய், 10 மே, 2022

திருவாரூரில் சங்கீத மும்மூர்த்திகள் ஜெயந்தி விழா.

திருவாரூரில் சங்கீத மும்மூர்த்திகள் ஜெயந்தி விழா பத்மஸ்ரீ ஏ.கே.சி நடராஜன் அவர்களுக்கு பாராட்டு விழா முன்னாள் மத்திய அமைச்சர் கலந்துகொண்டு நிகழ்ச்சி நடைபெற்றது..


திருவாரூரில் அவதரித்த கர்நாடக சங்கீத மும்மூர்த்திகளான ஸ்ரீ தியாக பிரம்மம், ஸ்ரீ முத்துசுவாமி தீட்சிதர், ஸ்ரீ சியாமா சாஸ்திரிகள் ஆகியோரின் ஜெயந்தி விழா ஆண்டுதோறும் திருவாரூரில் நடைபெறுவது வழக்கம், அதன்படி இன்று ஸ்ரீ தியாக பிரம்மத்தின் 255 ஜெயந்தி விழா காலை முதலே தொடர்ந்து நடைபெற்றது.


மாலை நடைபெற்ற இவ்விழாவில் பத்மஸ்ரீ ஏ. கே. சி. நடராஜன் அவர்களுக்கு முன்னாள் மத்திய அமைச்சரும் தற்போதைய பாராளுமன்ற உறுப்பினருமான  ஜி.கே. வாசன் அவர்கள் கலந்துகொண்டார்.

      

திருவாரூர் தனியார் மண்டபத்தில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் காஞ்சி காமகோடி பீடகர்நாடக சங்கீத மும்மூர்த்திகள் ஜெயந்தி விழா குழுவின் சார்பாக நடைபெற்ற நிகழ்ச்சியில் அமைப்பின் தலைவரும் தினமலர் ஆசிரியருமான இராமசுப்பு அவர்கள் கலந்துகொண்டு  ஏ.கே.சி. நடராஜன் அவர்களுக்கு பத்மஸ்ரீ விருது பெற்றதற்கான பாராட்டு சான்றுடன் பொற்கிழியும் வழங்கினார். இந்நிகழ்ச்சியில் முன்னாள் மத்திய அமைச்சரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ஜி. கே. வாசன் அவர்கள் ஏ.கே.சி. அவர்களை பாராட்டி பேசினார். மேலும் அவர் பேசுகையில் வரும் காலங்களில் மத்திய மாநில அரசுகள் இயல் இசை நாடக கலைஞர்களுகு பக்கபலமாக இருந்து அவர்களின் வளர்ச்சி பாதையில் கொண்டு சென்று சிறப்பாக செயல்படுத்த வேண்டும் என பேசினார். இந்நிகழ்வில் பாராட்டு பெற்ற பத்மஸ்ரீ ஏ.கே.சி.நடராஜன் அவர்கள் ஏற்புரை நிகழ்த்தி அனைவருக்கும் நன்றியும் வாழ்த்தும் கூறினார்.


விழாவில் காஞ்சி காமகோடி பீட கர்நாடக சங்கீத மும்மூர்த்திகள் ஜெயந்தி  விழாக் குழுவின் முக்கிய பொறுப்பாளர்கள் மற்றும் ஊரின் முக்கிய பிரமுகர்கள், சங்கீத பிரியர்கள், பொதுமக்கள் என ஏராளமானோர் கலந்துகொண்டு நிகழ்ச்சியானது நடைபெற்றது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad