பணம் இருந்தால் வா, இல்லையா வெளியே போ; சென்னை அரசு மருத்துவமனையில் கறார் வசூல். - தமிழக குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

வெள்ளி, 27 மே, 2022

பணம் இருந்தால் வா, இல்லையா வெளியே போ; சென்னை அரசு மருத்துவமனையில் கறார் வசூல்.

சென்னை அரசு பொது மருத்துவமனையில் லஞ்சம் நுழைவாயில்  உள்ளே செல்வதில் இருந்து வெளியே வரும் வரை லஞ்சம், சென்னை சென்ட்ரலில் உள்ள அரசு பொது மருத்துவமனையில் லஞ்சம் தலைவிரித்தாடுகிறது, ஒரு அவசர சிகிச்சைக்காக செல்லும் நோயாளியை டிராலியில் அவசர சிகிச்சைக்கு அழைத்து செல்லும் நபர்கள் வலுக்கட்டாயமாக உறவினர்களிடம் பணம் கேட்டு வசூல் செய்கிறார்களாம்.


அது மட்டுமில்லாமல் உள்ளே போனவுடன் அங்கு உள்ள செக்யூரிட்டிக்கு ஒரு தொகை பணம் கொடுக்க வேண்டுமாம். அப்படி பணம் கொடுக்கவில்லை எனில் அவர் நோயாளியின் உறவினர்களை உள்ளே விட மாட்டாராம். பணம் கொடுத்தால் மட்டுமே உள்ளே அனுமதிப்பாராம். பணம் கொடுக்காமல் அதையும் மீறி நோயாளிகளின் உறவினர்கள் உள்ளே சென்றால் தகாத வார்த்தையில் உறவினர்களை திட்டி வெளியேற வைப்பார்களாம்.இப்படி இந்த சம்பவம் தொடர்ந்து நடைபெறுவதாக நோயாளிகளின் உறவினர்கள் கூறுகின்றனர்.

  

பணம் இல்லை என்பதால் தான் நாங்கள் அரசு மருத்துவமனைக்கு வருகிறோம் ஆனால் இங்கு எங்களிடம் பணம்  பறிப்பதிலேயே குரியாய் இருக்கிறார்கள், பணம் இருந்தால் நாங்கள் தனியார் மருந்துவமனையிலேயே பார்த்துவிடுவோமே என்று கண்ணீர் விட்டு அழுது கொண்டே கூறுகிறார்கள், சென்னை அரசு பொது மருத்துவமனை செக்யூரிட்டிகளின் ராஜ்ஜியமாக திகழ்ந்து வருகிறது. 


முக்கியமாக டவர் 2இல் பிரதான நுழைவாயிலில் உள்ள செக்கியூரிட்டிக்கு பணம் கொடுக்கவில்லை என்றால் பிரச்சனை செய்து வெளியே அனுப்புவது இவருக்கு வழக்கமாம் இவர்களை போல் உள்ளவர்களை உடனடியாக பணிநீக்கம் செய்து லஞ்சம் இல்லாத மருத்துவமனையாக மாற்ற வேண்டும் என்பது மருத்துவமனைக்கு வரும் மக்களின் எதிர்பார்ப்பு சம்பந்தப்பட்ட மருத்துவமனை டின் அவர்களும் உயர் அதிகாரிகளும் நடவடிக்கை  எடுக்க வேண்டும் என்பது மருத்துவமனைக்கு வரும் நோயாளிகள் மற்றும் உறவினர்களின் பணிவான வேண்டுகோளாக உள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad

*/