மதுக்கடைகளை மூடவில்லை என்றால் தமிழகம் தலைகீழாக மாறிவிடும் - பாமக அன்புமணி ராமதாஸ் !!! - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

சனி, 7 மே, 2022

மதுக்கடைகளை மூடவில்லை என்றால் தமிழகம் தலைகீழாக மாறிவிடும் - பாமக அன்புமணி ராமதாஸ் !!!


பள்ளி மாணவர்கள் மதுகுடிப்பது வேதனை அளிப்பதாகவும், அடுத்த தலைமுறையை காப்பாற்ற பா.ம.க. ஆட்சிக்கு வரவேண்டும் என்றும் சிதம்பரத்தில் நடந்த கூட்டத்தில் டாக்டர் அன்புமணி ராமதாஸ் எம்.பி. பேசினார்.


கடலூர் மாவட்டம்,சிதம்பரத்தில் பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் பொதுக்குழு நடைபெற்றது.இக்கூட்டத்தில் டாக்டர் அன்புமணி ராமதாஸ் கலந்து கொண்டார் இந்நிகழ்ச்சிக்கு மாவட்ட செயலாளர் செல்வமகேஷ் தலைமை தாங்கினார் மாநில வன்னியர் சங்கத் தலைவர் பு.தா அருள்மொழி வரவேற்றார்.


இந்நிகழ்ச்சியில் பள்ளி மாணவர்கள் மது குடிப்பது வேதனையளிக்கிறது அடுத்த தலைமுறையை காப்பாற்ற பாமக ஆட்சிக்கு வரவேண்டும் என்று அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார் மதுக்கடைகளை மூடவில்லை என்றால் தமிழகம் தலைகீழாக மாறிவிடும் என்று அறிவித்தார். 


கூட்டத்தில் மாவட்ட தலைவர் தேவதாஸ் படை ஆண்டவர் நகர செயலாளர்கள் ராஜவேலு திலிப்ராஜன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad