குடியரசு துணைத்தலைவர் M.வெங்கய்யா நாயுடு அவர்களை ஊட்டியில் பழங்குடி படுக சமுதாய தலைவர்கள் சந்திப்பு. - தமிழக குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

சனி, 21 மே, 2022

குடியரசு துணைத்தலைவர் M.வெங்கய்யா நாயுடு அவர்களை ஊட்டியில் பழங்குடி படுக சமுதாய தலைவர்கள் சந்திப்பு.

நீலகிரி மாவட்டம், ஊட்டிக்கு வருகைப் புரிந்துள்ள மாண்புமிகு. குடியரசு துணைத்தலைவர் மரியாதைக்குரிய. M.வெங்கய்யா நாயுடு அவர்களை  ஊட்டியில் உள்ள ராஜ்பவனில் பழங்குடி படுக சமுதாய தலைவர்கள் நாக்குபெட்ட தலைவர் திருமிகு.C.முருகன் அவர்கள் தலைமையில் மரியாதை நிமித்தமாக  சந்தித்தார்கள்.


மரியாதை நிமித்தமான இச் சந்திப்பில்  முன்னாள் இந்திய தேயிலை வாரிய துணைத்தலைவர், திரு.ஹிட்டக்கல் போஜராஜ், நாக்குபெட்ட. படுகர் நல சங்கத்தலைவர், திரு. எடக்காடு சகாதேவன், நாக்குபெட்ட படுகர் நல சங்க பொதுச்செயலாளர், திரு.மஞ்சை.வி.மோகன், மேக்குநாடு படுகர் நல சங்க தலைவர், திரு.முதுகுலா தாத்தன், பொரங்காடு சீமே தலைவர், திரு. ஒரசோலை. ராமாகவுடர், பொரங்காடு சீமே ஆயிரம் மனெ தலைவர், திரு.ஜக்கனாரை ரவிசந்திரன் சீராளன், பொரங்காடு சீமே கைகாரு தலைவர், திரு.நஞ்சாகவுடர், படுகர் சங்கங்களின் கூட்டமைப்பு தலைவர், வழக்கறிஞர். திரு.மிளிதேன் பொப்ளி, முன்னாள் மாண்புமிகு.ராஜ்யசபா உறுப்பினர் திரு.அர்ஜுனன், இந்திய நிலக்கரி வாரிய உறுப்பினர் லவ்டேல், லாரன்ஸ் பள்ளி நிர்வாகக்குழு உறுப்பினர் திரு.ஹிட்டக்கல் ராஜேஷ்சந்தர், பொரங்காடு சீமே படுகர் நல சங்க முன்னாள் துணைத்தலைவர் திரு.கன்னேரிமுக்கு, கக்கி, சண்முகம் ஆகியோர்  கலந்து கொண்டார்கள். 


இந்த சந்திப்பில் நமது கோரிக்கையாக, பழங்குடி படுக சமுதாயத்தை 1941 ஆம் ஆண்டு வரை இருந்ததைப்போல் மீண்டும்  பழங்குடியின பட்டியலில் சேர்த்திட. வேண்டும். என பரிந்துரைத்துள்ள மாநில அரசின் பரிந்துரையை ஏற்று மத்திய அரசு பழங்குடி படுக சமுதாயத்தை,  மத்திய அரசின் பழங்குடியின பட்டியலில் மீண்டும் சேர்த்திட  உதவும்படி மாண்புமிகு.குடியரசு துணைத்தலைவர் அவர்களை இருகரம் கூப்பி மெத்த பணிவன்புடன் கேட்டுக்கொண்டார்.


எங்களது கோரிக்கையினை அன்புடன் செவிமடுத்து உரிய வழிமுறையாக. நீங்கள்  கொண்டுச்சென்று, மாநில அரசாலும் பரிந்துரைத்து சமர்ப்பிக்கப்பட்டுள்ள கோரிக்கை குறித்து உரிய மேல் நடவடிக்கைக்கு கண்டிப்பாக எடுத்துச்சென்று உதவுகின்றேன் என அன்புடன் கூறினார், இச்சந்திப்பில் மாண்புமிகு. தமிழக வனத்துறை அமைச்சர் திருமிகு. இளித்தொரை.K. ராமசந்திரன் அவர்கள் உடனிருந்தார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad

*/