சென்னை இரயில் நிலையங்களில் லிஃப்ட் அமைக்கும் பணி தீவிரம். - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

வெள்ளி, 1 ஜூலை, 2022

சென்னை இரயில் நிலையங்களில் லிஃப்ட் அமைக்கும் பணி தீவிரம்.

தெற்கு ரயில்வே, சென்னை கோட்டத்தின் பேசின் பிரிட்ஜ் ரயில் நிலையத்தில், அனைத்து பாதுகாப்பு அம்சங்களுடன் கூடிய இரண்டு புதிய லிஃப்டுகள், இன்று (01.07.2022) பயணிகளின் பயன்பாட்டுக்கு திறந்து வைக்கப்பட்டுள்ளன.


ரூ.80 லட்சம் மதிப்புள்ள இந்த இரண்டு லிப்ட்களும் 13நபர்களை ஏற்றிச்செல்லும் திறன் கொண்டவை. இந்த லிஃப்ட்கள், பயணிகளுக்கு, குறிப்பாக உடல் ஊனமுற்றோர், மூத்த குடிமக்கள் மற்றும் கர்ப்பிணிப் பெண்கள் ரயில் நிலையத்தின் பல்வேறு பகுதிகளை எளிதாகச் சென்றடைய உதவியாக இருக்கும்.


இந்த புதிய லிஃப்டுகள் நடைமேடை எண் 2 & 3 ல் பாதசாரி மேம்பாலத்தில் நிறுவப்பட்டுள்ளன, இது நடைமேடை எண்கள் 6 & 7 க்கு செல்லும் பாதசாரி மேம்பாலத்துடன் பயணிகளை இணைக்கும். தற்போது சென்னை கோட்டத்தில் 21 ரயில் நிலையங்களில் 40 லிஃப்ட்களும், 18 நிலையங்களில் 55 எஸ்கலேட்டர்களும் இயங்கி வருகின்றன. 


மேலும், இந்த நிதியாண்டில் செங்கல்பட்டு மற்றும் அரக்கோணத்தில் மேலும் 2 எஸ்கலேட்டர்களை நிறுவ திட்டமிடப்பட்டுள்ளது, மேலும், சென்னை எழும்பூர், வில்லிவாக்கம், அம்பத்தூர், கொரட்டூர், திருநின்றவூர், குரோம்பேட்டை, பொன்னேரி, வண்ணாரப்பேட்டை மற்றும் ராயபுரம் ஆகிய ரயில் நிலையங்களில் புதிய லிஃப்ட் அமைக்கும் பணி வேகமாக நடைபெற்று வருகிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad