உதகை ஏடிசி பகுதியில் ஆளும் தமிழக அரசை கண்டித்து நீலகிரி மாவட்ட பாரதிய ஜனதா கட்சியின் சார்பில் நடைபெற்ற உண்ணாவிரத அறப்போறாட்டம் மாவட்ட தலைவர் மோகன்ராஜ் அவர்கள் தலைமையில் நடைபெற்றது. உண்ணாவிரத போராட்டத்தில் சிறப்பு அழைப்பாளர்களாக நீலகிரி மாவட்ட பார்வையாளர் நந்தகுமார், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் சௌந்தர பாண்டியன், முன்னாள் மாவட்ட தலைவர் மற்றும் செயற்குழு உறுப்பினர் ராமன், மாநில செயற்குழு உறுப்பினர் மற்றும் தொழிலதிபர் இட்டக்கல் போஜராஜ் ஆகியோர் கலந்து கொண்டனர்.
மாவட்ட பொது செயலாளர்கள் ஈஸ்வரன், கே ஜே குமார், பரமேஸ்வரன் மற்றும் உதகை நகரம்,கோத்தகிரி தெற்கு, வடக்கு, கோத்தகிரி நகர், குன்னூர் நகர், குன்னூர் வடக்கு, வெலிங்டன், கூடலூர்,குந்தா ஆகிய மண்டல் நிர்வாகிகள் மற்றும் பல்வேறு அணிகளை சேர்ந்த நிர்வாகிகள், தொண்டர்கள் கலந்து கொண்டு தமிழக அரசுக்கு எதிராக கோஷங்கள் எழுப்பினர்.இந்த உண்ணாவிரத அறப்போராட்டத்திற்கு கலந்து கொண்ட சிறப்பு அழைப்பாளர் நந்தகுமார் அவர்கள் செய்தியாளர்களுடன் பேசும்பொழுது தமிழக அரசு அறிவித்த 505 தேர்தல் வாக்குறுதிகளில் எந்த வாக்குறுதியையும் தமிழக அரசு நிறைவேற்ற வில்லை. மக்களை ஏமாற்றி வரும் அரசாக இது விளங்கி வருகிறது. பெட்ரோல் விலை குறைக்கவில்லை அமைச்சர்கள் ஊழலில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதனை தமிழக மாநிலத் தலைவர் அண்ணாமலை அவர்கள் சுட்டிக்காட்டி வருவது குறிப்பிடத்தக்கது என்று பேசினார். தமிழக அரசை கண்டித்து பாஜக மாநில தலைவர் அண்ணாமலை அவர்களின் வழிகாட்டுதலின்படி தமிழகத்தில் சுமார் 60 இடங்களில் உண்ணாவிரத அறப்பட்ட நடைபெற்று வருவதாக கூறினார்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக