இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை சார்பில், தேசிய மற்றும் சர்வதேச போட்டிகளில் பங்கேற்று வென்ற வீரர் மற்றும் வீராங்கனைகளுக்கு 16 கோடியே 28 இலட்சத்து 25 ஆயிரம் ரூபாய்க்கான காசோலைகளை வழங்கினார்மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. மு.க. ஸ்டாலின் அவர்கள் இன்று 12.9.2022 சென்னை, நேரு உள்விளையாட்டு அரங்கத்தில் நடைபெற்ற விழாவில், இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை சார்பில், தேசிய மற்றும் சர்வதேச போட்டிகளில் பங்கேற்று பதக்கங்கள் வென்ற 1130 விளையாட்டு வீரர் மற்றும் வீராங்கனைகளுக்கு உயரிய ஊக்கத் தொகையாக 16 கோடியே 28 இலட்சத்து 25 ஆயிரம் ரூபாய்க்கான காசோலைகளை வழங்கினார்.
இந்த விழாவில், மாண்புமிகு இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் திரு. பி.கே. சேகர்பாபு, மாண்புமிகு இளைஞர் நலன், விளையாட்டு மேம்பாட்டுத் துறை, சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத் துறை அமைச்சர் திரு. சிவ. வி. மெய்யநாதன், பெருநகர சென்னை மாநகராட்சி மேயர் திருமதி ஆர். பிரியா, சட்டமன்ற உறுப்பினர் திரு. இ. பரந்தாமன், தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் துணைத் தலைவர் திரு. அசோக் சிகாமணி, தலைமைச் செயலாளர் முனைவர் வெ. இறையன்பு, இ.ஆ.ப., இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை முதன்மைச் செயலாளர் செல்வி. அபூர்வா, இ.ஆ.ப., தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய தலைமை செயல் அலுவலர் உறுப்பினர் செயலர் மருத்துவர் கா. ப. கார்த்திகேயன், இ.ஆ.ப., மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக