கொரோனா, டெங்குவுடன் பன்றிக்காய்ச்சலும் பரவுகிறது. - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

புதன், 21 செப்டம்பர், 2022

கொரோனா, டெங்குவுடன் பன்றிக்காய்ச்சலும் பரவுகிறது.

தமிழகத்தில் டெங்கு காய்ச்சலுக்கு 121 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழகத்தில் பருவ நிலை மாற்றத்தால் காய்ச்சல் பாதிப்புகள் அதிகரித்து வருகின்றன. கொரோனா தொற்று குறையாத நிலையில், தினசரி 500 பேர் என்ற அளவில் பாதிக்கப்பட்டு வருகின்றனர். அத்துடன் 'எச்1என்1 இன்ப்ளூயன்சா வைரஸ்' வகையை சேர்ந்த பன்றிக்காய்ச்சலிலும் தினசரி 200க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்படுகின்றனர்.

பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வருவதால், இன்று முதல் மருத்துவ முகாம்களை, தமிழக அரசு நடத்த உள்ளது.டெங்கு பாதிப்பும் அதிகரித்து வருகிறது. கடந்த ஜூன் மாதத்தில் 47 பேர் டெங்குவுக்கு பாதிக்கப்பட்டனர். தொடர்ந்து ஜூலையில் 51; ஆக., 53 என படிப்படியாக அதிகரித்து, செப்., மாதத்தில் இதுவரை 121 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.இதுகுறித்து, சுகாதாரத் துறை அதிகாரிகள் கூறியதாவது:பருவ காலம் மாற்றம் ஏற்படும்போது, டெங்கு, பன்றிக்காய்ச்சல் பாதிப்பு இருப்பது இயல்பானது.


கொரோனாவுடன், சாதாரண காய்ச்சல் முதல் டெங்கு, பன்றிக்காய்ச்சலும் இருப்பதால், பரவல் அதிகம் என்பதுபோல் தோற்றம் அளிக்கிறது. தமிழகத்தில் உள்ள எட்டு கோடி பேரில், ஒரு சதவீதம் என்ற அளவில் தான் காய்ச்சல் பாதிப்பு உள்ளது. எனவே, பொது மக்கள் அச்சப்பட வேண்டாம்.அதேநேரம், சுய சிகிச்சை மேற்கொள்ளாமல், டாக்டர்களின் ஆலோசனைப்படி மருந்துகளை உட்கொள்ள வேண்டும். காய்ச்சல், சளி, இருமல் போன்ற பாதிப்புகள் இருந்தால், அலட்சியப்படுத்தாமல் உடனடியாக சிகிச்சை பெற வேண்டும்.இவ்வாறு அவர்கள் கூறினர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad