குமரி மாவட்டத்தில் கனிமவளம் குறித்து பொன்.ராதாகிருஷ்ணன் பொய்யான தகவல்களை தெரிவித்து வருகிறார். ஏற்கனவே அ.தி.மு.க., பா.ஜனதா ஆட்சிக் காலத்தில் 39 குவாரிகள் செயல்பட்டு வந்தது. தி.மு.க. ஆட்சிக்கு வந்த பிறகு தற்போது 6 குவாரிகள் மட்டுமே செயல்பட்டு வருகிறது.
விதிகளுக்கு புறம்பாக எந்த குவாரிகளும் செயல்படவில்லை. குமரி மாவட்டத்தில் எடுக்கப்படுகின்ற கனிம வளங்கள் அனைத்தும் குமரி மாவட்டத்திற்கு தான் பயன்படுத்தப்பட்டு வருகிறது. வெளியூர்களுக்கு கனிம வளங்கள் கொண்டு செல்லப்படவில்லை.
கனிமவளம் குறித்து பொன். ராதாகிருஷ்ணன் என்னுடன் ஒரே மேடையில் பேச தயாராக உள்ளாரா? ஆனால் நான் தயாராக உள்ளேன். நேருக்கு நேர் விவாதிக்கவும் தயாராக இருக்கிறேன்.
நாகர்கோவில் கோணம் ஐ.டி.ஐ.யில் ரூ.3.73 கோடி மதிப்பில் புதிய வகுப்பறை கட்டிடம் கட்டுவதற்கான அடிக்கல் நாட்டு விழாவிற்க்கு பின்பு தகவல் தொழில்நுட்ப துறை அமைச்சர் மனோ தங்கராஜ் செய்தியாளர்களுக்கு பேட்டி.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக