துறையூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் சாதாரண கூட்டம் நடைப்பெற்றது. - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

வெள்ளி, 23 செப்டம்பர், 2022

துறையூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் சாதாரண கூட்டம் நடைப்பெற்றது.

திருச்சி மாவட்டம் துறையூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் ஒன்றியக்குழு தலைவர் சரண்யா மோகன்தாஸ் தலைமையில் கூட்டம் நடைப்பெற்றது கூட்டத்தில் 16 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன, ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி மேல்நிலைப்பள்ளி கழிப்பறை பராமரிப்பதற்கு ஊதியம் மற்றும் உபகரணங்கள் கொள்முதல் மன்றம் அங்கீகாரம் ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளிகளில் புதிய சமையலறை கட்டிடம் கட்டுதல் ஊராட்சி ஒன்றிய பொது நிதி 2022-2023 ஆம் ஆண்டு ஒன்றிய நிதியில் இருந்து விடுவிக்கப்படும் மாநில நிதிக்குழு மான்யத்தில்  பின்வரும் பணிகள் தேர்வு செய்துள்ளனர்.


சிக்கத்தம்பூர் ஊராட்சி, பெருமாள்பாளையம் ஊராட்சி, கோம்பை ஊராட்சி, வரதராஜபுரம், செல்லிப்பாளையம், கோவிந்தாபுரம் ஊராட்சி, முருகூர் கொட்டையூர், சொரத்தூர், கீரம்பூர், நடுவலூர், மதுராபுரி, கண்ணூர், க. பாளையம், பொன்னுசங்கம்பட்டி, சிங்களாந்தபுரம், பகளவாடி, ஆகிய ஊராட்சிகளில் சிமென்ட் சாலை கழிவுநீர் வடிகால் தார்சாலை பைப்லைன் கிணற்றிற்கு கம்பி வலை  போன்ற பணிகளுக்கு நிதி ஒதுக்கீடு செய்துள்ளனர் இந்நிகழ்ச்சியில் துணைத்தலைவர் புவனேஸ்வரி வட்டார வளர்ச்சி அலுவலர் சரவணகுமார் செந்தில்குமார் மற்றும் கவுன்சிலர்கள் கலந்து கொண்டனர் 


- தமிழக குரல் செய்திகளுக்காக துறையூர் செய்தியாளர் முருகேசன் 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad