புரட்சி பாரதம் கட்சியின் வார்டு நிர்வாகிகள் கலந்தாய்வு கூட்டம். - தமிழக குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

செவ்வாய், 27 செப்டம்பர், 2022

புரட்சி பாரதம் கட்சியின் வார்டு நிர்வாகிகள் கலந்தாய்வு கூட்டம்.

கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்தூர்பேட்டை நகராட்சியில் உள்ள வார்டுக்கான நிர்வாகிகள் கலந்தாய்வு கூட்டம் நேற்று 25.9.2022 மாலை சுமார் 6. மணி அளவில் திருவெண்ணெய்நல்லூர் கட்சியின் அலுவலகத்தில் மாவட்டத் தலைவர்  v.சுப்புரமணியன் அவர்களின் தலைமையிலும் உளுந்தூர்பேட்டை தொகுதி செயலாளர் Kk.ஏழுமலை 

உளுந்தூர்பேட்டை ஒன்றிய செயலாளர் s.பிரசாத் ஆகியோரின் முன்னிலையில் உளுந்தூர்பேட்டையில் உள்ள அனைத்து வார்டுகளிலும் புரட்சி பாரத கட்சியின் வார்டு நிர்வாகிகள் தேர்வு செய்திட வேண்டும் என்று மாவட்டச் செயலாளர் வழக்கறிஞர் பூவை ஆறுமுகம் கேட்டுக்கொண்டதன் பேரில் நிர்வாகிகள் தேர்வு செய்யும் கூட்டம் நடைபெற்றது கூட்டத்தில் 

1) தீர்மானமாக உளுந்தூர்பேட்டை நகராட்சி உள்ள அனைத்து வார்டுகளிலும் உறுப்பினர் சேர்த்தல் சுவர் விளம்பரம் எழுதுதல் வார்டு முழுவதும் கொடி கம்பம் ஏற்றுதல் வேண்டும் எனவும்.

2). உளுந்தூர்பேட்டை ஒன்றியம் முழுவதும் கிளைகள் தோறும் கிளை உருவாக்குதல் கிளை நிர்வாகிகளை தேர்ந்தெடுத்தல் கிளைகள் தோறும் கொடிக்கம்பம் ஏற்ற வேண்டும் எனவும்.

3) உளுந்தூர்பேட்டை நகராட்சியில் பயன்பாட்டில் இருக்கும் சேமிப்பு குப்பை கிடங்கில் குப்பைகளை கொட்டாமல் பொது இடங்களில் பொது மக்களுக்கு இடையூறாகவும் வாகன ஓட்டிகளுக்கு இடையூறாகவும் பொதுமக்கள் குடியிருக்கும் பகுதியில் குப்பைகளை கொட்டுவதால் பொதுமக்களுக்கு துர்நாற்றம் வீசி பல நோய் தொற்று ஏற்படும் அபாயம் நிலையில் உள்ளதால் சேமிப்பு குப்பை கிடங்கில் கொட்ட வேண்டும் என்று புரட்சி பாரதம் கட்சி உளுந்தூர்பேட்டை நகராட்சிக்கு கோரிக்கை வைக்கிறது

4) புரட்சி பாரதம் கட்சியின் நிர்வாகிகளுக்கான பயிற்சி கூட்டம் இரண்டு வாரத்திற்கு ஒரு முறை வாரத்தின் இறுதி நாளில் பயிற்சி கூட்டம் நடத்த வேண்டும் எனவும்

 5) சமீப காலமாக கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் அரசு கட்டிடங்கள் சிமெண்ட் சாலைகள் கழிவுநீர் கால்வாய் மற்றும் சுவர் மதில்கள் கட்டும் பணிகள் நடைபெற்று வருகிறது காண்ட்ராக்ட் மூலம் எடுக்கப்படும் பணிகள் ஆட்சியாளர்களுக்கும் அரசு அதிகாரிகளுக்கும் விடியல் கட்சி காரர்களுக்கும் எடுக்கப்படும் ஒப்பந்தத்தில் பாதி பர்சன்டேஜ் கொடுப்பதினால் காண்ட்ராக்ட் எடுத்து வேலை செய்யும் காண்டாக்ட் காரர்கள் தரம் இல்லாமல் சிமெண்ட்டே பயன்படுத்தாமல் சிமெண்ட் மாதிரி உள்ள எம் சேண்ட் பயன்படுத்தி தரம் இல்லாமல் கட்டி கடந்த ஒரு மாதத்தில் கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் கட்டப்பட்ட அனைத்தும் கழிவுநீர் கால்வாய் மற்றும் சுவர்கள் ஆகியவை உடைந்திருப்பது தின செய்தியாக வந்திருப்பதை நாம் அறிவோம் எனவே மாவட்ட ஆட்சியர் அவர்கள் ஒதுக்கப்படும் முழு நிதியையும் ஒப்பந்ததாரருக்கு அளித்து இடையில் தரகர்கள் எவருக்கும் சதவீதம் கொடுக்காமல் அரசுக்கு இழப்பீடு ஏற்படுத்தாமல் காண்ட்ராக்ட் பணியை செய்திட வேண்டும் அப்படி பர்சன்டேஜ் கேட்கும் அதிகாரிகளுக்கும் ஆட்சியாளர்கள் மீதும் கிரிமினல் வழக்கு பதிவு செய்தும் உடனடியாக அவர்களை கைது செய்திட வேண்டுமென புரட்சி பாரதம் கட்சி உயர்திருமாவட்ட ஆட்சியருக்கு கோரிக்கை வைக்கிறது.


இந்த தீர்மானங்கள் அனைத்தும் புரட்சியாளர் கட்சியின் நிர்வாகிகள் முன்னிலையில் ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டன.


இந்த தீர்மானத்தில்  நிர்வாகிகள்  ஜீவா, அருண்பாண்டியன், தர்மதுரை, வீரமணி, மணிரத்தினம், பாண்டியன், மணிகண்டன், சிவா.சேகர் ஆகிய மாவட்ட ஒன்றிய நகர வார்டு நிர்வாகிகள்  கலந்து கொண்டனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad

*/