ஆயுதபூஜை மற்றும் தொடர் விடுமுறையை முன்னிட்டு சொந்த ஊர் செல்லும் மக்களின் வசதிக்காக, கூடுதல் அரசுப்பேருந்துகள் இயக்கப்படும் - போக்குவரத்து துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர். - தமிழக குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

புதன், 28 செப்டம்பர், 2022

ஆயுதபூஜை மற்றும் தொடர் விடுமுறையை முன்னிட்டு சொந்த ஊர் செல்லும் மக்களின் வசதிக்காக, கூடுதல் அரசுப்பேருந்துகள் இயக்கப்படும் - போக்குவரத்து துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர்.

வரும் 30-ஆம் தேதி வழக்கமாக இயங்கும் 2000 பேருந்துகளுடன் கூடுதலாக 1300 பேருந்துகளும், 1 ஆம் தேதி கூடுதலாக 1100 பேருந்துகளும் பயணிகள் வசதிக்காக இயக்கப்படும் - எஸ்.எஸ்.சிவசங்கர்.


பள்ளி மாணவர்களின் பாதுகாப்பு மற்றும் பேருந்து வசதிகளின் தேவைகள் குறித்து போக்குவரத்து துறை அதிகாரிகள் மற்றும் பள்ளி கல்வித்துறை அதிகாரிகள் அடங்கிய வாட்சப் குழு ஏற்படுத்தப்பட்டு தேவைக்கேற்ப இனி பேருந்து வசதிகள் செய்து தர போக்குவரத்து மண்டல மேலாண் இயக்குநர்களிடம் அறிவுறுத்தியுள்ளோம்.


மகளிர் இலவச பேருந்தில் பயணிப்பவர்களிடம் கனிவாக நடந்து கொள்ள ஓட்டுநர், நடத்துனர்களுக்கு அறிவுறுத்தியுள்ளோம், மகளிர் இலவச பயணத்திற்கான பயண சீட்டு கட்டணத்தை தமிழக அரசு, போக்குவரத்து துறைக்கு வழங்கி விடுகிறது, டீசல் விலை தொடர்ந்து உயர்ந்தாலும், தமிழக முதல்வரின் அறிவுரைப்படி பேருந்து பயண கட்டணம் உயராது - எஸ்.எஸ்.சிவசங்கர் பேட்டி.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad

*/