கா-ந-பா திரைப்படத்தின் போஸ்டர் வெளியீடு விழா. - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

வியாழன், 8 செப்டம்பர், 2022

கா-ந-பா திரைப்படத்தின் போஸ்டர் வெளியீடு விழா.

கா-ந-பா திரைப்படத்தின் இயக்குனர் கிங் சார்லஸ் ஒருங்கிணைப்பில் கா-ந-பா திரைப்படத்தின் போஸ்டர் வெளியீடு விழா புதுவை தமிழ்ச்சங்க வளாகத்தில் இன்று நடைபெற்றது. கிவின் புரெடக்‌ஷன் வழங்கும், அவினாஷ் நடிக்கும் கா-ந-பா  திரைப்படத்தின் பைலட் மூவி  போஸ்டர் வெளியீடு நிகழ்ச்சி நடைபெற்றது.


புதுவை நடிகர் சங்க தலைவர் நடிகர் முத்து தலைமையில்,  சிறப்பு விருந்தினராக நகைச்சுவை கலைஞர்  போண்டாமணி  கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்,  முன்னிலையாக தமிழ் திரை கலைஞர்கள் நலச் சங்கத்தின் தலைவர் எம்.சுப்புராஜ் கலந்து கொள்ள நிகழ்ச்சி  நடைபெற்றது. இதில் சிறப்பு அழைப்பாளர்களாக தமிழ் திரை கலைஞர்கள் நலச் சங்கத்தின் பொதுச்செயலாளர் இயக்குனர்.


மதுரை கணகு, பொதுநல சேவகர், கலியமூர்த்தி, ஸ்ரீசத்ரபதி, பன்னீர்செல்வம், ராபின், மதுரை T.k.n.s நிர்வாகிகள், சுரேஷ், சிவமணி, தாஸ்,  கதையின் நாயகன் அவினாஷ் நாயகி தாரா, துணை  நடிகை ஜெனி, ஒளிப்பதிவாளர் சிவா, இசையமைப்பாளர் பாபு உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர் நிகழ்ச்சியின் இறுதியில் இத்திரைப்படத்தின் கதை திரைக்கதை வசனம் எழுதி இயக்கிய கிங் சார்லஸ் இத்திரைப்படத்தின்  கரு குறித்தும், சமூகத்தில் நடக்கும் முக்கிய பிரச்சினையை முன்னிறுத்தி இத்திரைப்படம் எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார். 


மேலும் விரைவில் அடுத்த திரைப்படத்திற்கான பணிகள் தொடங்க உள்ளதாகவும், இறுதியில் நன்றியுரை நிகழ்த்தினார். 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad