பிரதம மந்திரி வீடு வழங்கும் திட்டத்தில் குளறுபடி; உளுந்தூர்பேட்டை வட்டார வளர்ச்சி அலுவலகம் முற்றுகை. - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

புதன், 21 செப்டம்பர், 2022

பிரதம மந்திரி வீடு வழங்கும் திட்டத்தில் குளறுபடி; உளுந்தூர்பேட்டை வட்டார வளர்ச்சி அலுவலகம் முற்றுகை.

கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை வட்டார வளர்ச்சி அலுவலகத்திற்கு உட்பட்ட எம்.குன்னத்தூர் கிராமத்தில் பிரதம மந்திரி வீடு வழங்கும் திட்டத்தின் கீழ் கடந்த ஆண்டு வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் நலத்திட்டங்கள் வழங்கும் கூட்டத்தில் நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் ஏ.வ.வேலு கலந்து கொண்டு வீடுகட்ட அனுமதி ஆணை ராஜேந்திரன் என்பவருக்கு வழங்கினார்.


அமைச்சர் வழங்கிய பிரதம மந்திரி குடியிருப்புக்கான வீடு கட்டும் அனுமதி ஆணை நகலில் ராஜேந்திரன் த/பெ ராஜு என்பதற்கு பதிலாக ராமச்சந்திரன் த/பெ சாமிக்கண்ணு என்று இருந்தது.


இதனை அடுத்து பஞ்சாயத்து கிளை செயலளரிடம் முறையிட்டபோது பெயர் தவறாக கம்ப்யூட்டரில் அச்சு இடப்பட்டுள்ளது பெயரை மாற்றிக் கொள்ளலாம் நீங்கள் வீட்டை கட்டுங்கள் என கூறியுள்ளார் இதனை தொடர்ந்து தான் வசித்து வந்த கூரை வீட்டை இடித்துவிட்டு புதிய வீடு கட்ட அரசு கொடுக்கும் சிமெண்ட் மற்றும் கம்பி வாங்க சென்ற பொழுது பெயர் மாறி இருக்கிறது உங்களுக்கு வீடு வழங்க முடியாது என வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் கூறப்பட்டுள்ளது.


இதனை அடுத்து வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் உள்ள கம்ப்யூட்டரில் பார்த்த பொழுது ராஜேந்திரனுக்கு கொடுத்த அனுமதி ஆணையில் பெயர் மட்டுமே மாறியுள்ளது தெரிய வந்தது வங்கி கணக்கு மற்றும் ஆதார எண் அனைத்தும் ராஜேந்திரனுடையது என்பது தெரிய வந்தது.


இதனால் பாதிக்கப்பட்ட பயனாளியான ராஜேந்திரன், புரட்சி பாரதம் கட்சியின் தொகுதி செயலாளர் K.K.ஏழுமலை, மாவட்டச் செயலாளர் பூவை ஆறுமுகம் மாவட்டத் தலைவர் சுப்பிரமணியன் உளுந்தூர்பேட்டை ஒன்றிய செயலாளர் சே.பிரசாத் ஆகியோர் தலைமையில் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.


பின்னர் வட்டார வளர்ச்சி அலுவலகத்திற்கு தகவல் அறிந்து வந்த காவல் துறையினர் பேச்சுவார்த்தை நடத்தி இன்னும் 15 நாட்களுக்குள் கே வி டீ திட்டத்தின் கீழ் வீடு வழங்க அனுமதி ஆணை வழங்கப்படும் என வட்டார வளர்ச்சி அலுவலர் வாக்குறுதி கொடுத்தார் பின்னர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்ட புரட்சி பாரதம் கட்சியினர் கலைந்து சென்றனர். 


இதில் நகர நிர்வாகிகள் பாண்டியன் அருண்பாண்டியன் மணிரத்தினம் ஜீவா தர்மதுரை, பெரியசெவலை நிர்வாகிகள் சந்தோஷ், லோகு, தீர்த்தமலை, குன்னத்தூர் நிர்வாகிகள் பன்னீர், தீர்த்தமலை, பழனிவேல் ஆகிய 50கும்  மேற்பட்டோர் நிர்வாகிகள் மற்றும் பாதிக்கப்பட்டோரின் உறவினர்கள் கலந்து கொண்டனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad