இந்த சோதனை என்பது பீகாரில் கடந்த ஜூலை மாதம் இயக்கத்தின் தலைவர்கள் மற்றும் உறுப்பினர்களுக்கு எதிராக NIA-ஆல் தொடங்கப்பட்ட அச்சுறுத்தலின் தொடர்ச்சியாகும். பாட்னாவின் புல்வாரி பகுதியில் பீகார் காவல்துறையினரால் விசாரணை என்ற பெயரில் அப்பாவி மக்கள் கைது செய்யப்பட்டனர். பின்னர் அவர்கள் ஊடகங்கள் முன்பு பயங்கரவாதிகள் என காண்பிக்கப்பட்டனர். பீகார் காவல்துறையினர் வெளியிட்ட முன்னுக்குபின் முரண்பாடான அறிக்கைகளிலிருந்து, இந்த வழக்கு அரசியல் உள்நோக்கம் கொண்டது மற்றும் பாப்புலர் ஃப்ரண்டை குறிவைக்கும் சதியின் ஒரு பகுதி என்பது தெளிவாகிறது. அதன் பின்னர் பீகார் மற்றும் பிற மாநிலங்களில் உள்ள இயக்கத்தின் உறுப்பினர்கள் மற்றும் தலைவர்கள் உட்பட 20 பேரின் பட்டியலை காவல்துறை வெளியிட்டது.
'NIA இந்த விசாரணையை விரைவாக எடுத்துக்கொண்டதன் மூலம் இந்த வழக்கு பாப்புலர் ஃப்ரண்டை பழிவாங்குவதற்கானதுதான் என்ற சந்தேகத்தை உண்மைப்படுத்தியுள்ளது. NIA என்கிற விசாரணை ஏஜென்சிகள் மீது ஒடுக்கப்பட்ட பின்தங்கிய மக்கள் மத்தியில் பெரிதளவு நம்பகத்தன்மை இல்லை. தற்போது பாப்புலர் ஃப்ரண்டின் வடகிழக்கு பகுதியின் மண்டலச் செயலாளர் முஹம்மது ரோஸ்லான் அவர்கள் வீட்டில் NIA சோதனை நடத்தியுள்ளது. இயக்கத்தின் செயல்பாடுகளின் ஒரு பகுதியாக பீகாருக்குச் சென்றதைத் தவிர, ரோஸ்லான் வேறு எந்தத் தவறும் செய்யவில்லை. ஒரு மாநிலத்தைச் சேர்ந்த குடிமகன் மற்றொரு மாநிலத்திற்குச் செல்வதில் என்ன குற்றம் இருக்க முடியும்' என்று அனிஸ் அஹம்மது கேள்வி எழுப்பியுள்ளார்.
மேலும் அவர் கூறுகையில் 'அரசியல் எஜமானர்களின் கைக்கூலிகளாக செயல்படுவதை நிறுத்துமாறு NIA-வை பாப்புலர் ஃப்ரண்ட் கேட்டுக்கொள்கிறது. இதுபோன்ற அச்சுறுத்தல்கள் மற்றும் அவதூறுகள் பாப்புலர் ஃப்ரண்டை ஒருபோதும் தடுத்து நிறுத்தாது. அரசியல் உள்நோக்கம் கொண்ட இந்த வழக்குகளை களத்திலும் நீதிமன்றத்திலும் எதிர்கொள்ளும் வலிமை இயக்கத்திற்கு உள்ளது என்றார்

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக