மைசூரு, யஷ்வந்த்பூரில் இருந்து தூத்துக்குடி, நெல்லைக்கு சிறப்பு ரெயில். - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

சனி, 1 அக்டோபர், 2022

மைசூரு, யஷ்வந்த்பூரில் இருந்து தூத்துக்குடி, நெல்லைக்கு சிறப்பு ரெயில்.

தென்மேற்கு ரெயில்வே சார்பில், பண்டிகை கால கூட்ட நெரிசலை சமாளிக்க மைசூரு, யஷ்வந்த்பூரில் இருந்து நெல்லை, தூத்துக்குடிக்கு சிறப்பு ரெயில் இயக்கப்படுகிறது.


பண்டிகை கால கூட்ட நெரிசலை சமாளிக்க தென்மேற்கு ரெயில்வே சார்பில் தென்மாவட்டங்களுக்கு சிறப்பு ரெயில்கள் இயக்கப்படுகின்றன. அதன்படி, யஷ்வந்த்பூர்-நெல்லை மற்றும் தூத்துக்குடி-மைசூரு இடையே சிறப்பு ரெயில்கள் இயக்கப்படவுள்ளன. யஷ்வந்த்பூர்-நெல்லை சிறப்பு ரெயில் (வ.எண்.06565) வருகிற 4-ந் தேதி மற்றும் 11-ந் தேதி (செவ்வாய்க்கிழமைகளில்) யஷ்வந்த்பூரில் இருந்து மதியம் 12.45 மணிக்கு புறப்பட்டு நள்ளிரவு 1.15 மணிக்கு மதுரை ரெயில் நிலையம் வந்தடைகிறது. மறுநாள் அதிகாலை 4.30 மணிக்கு நெல்லை சென்றடைகிறது.


மறுமார்க்கத்தில் நெல்லை-யஷ்வந்த்பூர் சிறப்பு ரெயில் (வ.எண்.06566) வருகிற 5-ந் தேதி மற்றும் 12-ந் தேதி (புதன்கிழமைகளில்) நெல்லையில் இருந்து காலை 10.40 மணிக்கு புறப்பட்டு மதியம் 1.10 மணிக்கு மதுரை ரெயில் நிலையம் வந்தடைகிறது. நள்ளிரவு 11.30 மணிக்கு யஷ்வந்த்பூர் சென்றடைகிறது. இந்த ரெயில்கள் பனஸ்வாடி, கார்மேலரம், ஓசூர், தர்மபுரி, சேலம், நாமக்கல், கரூர், திருச்சி, திண்டுக்கல், மதுரை, விருதுநகர், கோவில்பட்டி ஆகிய ரெயில் நிலையங்களில் நின்று செல்லும். இந்த ரெயில்களில் 2 இரண்டடுக்கு குளிரூட்டப்பட்ட பெட்டிகள், 4 மூன்றடுக்கு குளிரூட்டப்பட்ட பெட்டிகள், 11 இரண்டாம் வகுப்பு தூங்கும் வசதி பெட்டிகள், ஒரு சமையல் பெட்டி இணைக்கப்பட்டிருக்கும். 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad