இந்திய அணி பாகிஸ்தானுக்கு வரவில்லை என்றால் உலகக் கோப்பையைப் புறக்கணிப்போம் பாகிஸ்தான் அதிரடி. - தமிழக குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

வியாழன், 20 அக்டோபர், 2022

இந்திய அணி பாகிஸ்தானுக்கு வரவில்லை என்றால் உலகக் கோப்பையைப் புறக்கணிப்போம் பாகிஸ்தான் அதிரடி.

2005-ஆம் ஆண்டிற்குப் பிறகு இந்திய அணி பாகிஸ்தானுக்குச் சென்று தொடர்களில் பங்கேற்கவில்லை. இதையடுத்து பல ஆண்டுகளுக்குப் பிறகு 2023-ம் ஆண்டிற்கான ஆசியக் கோப்பை கிரிக்கெட் போட்டி பாகிஸ்தானில் நடைபெறும் என்றும் இந்திய அணி பாகிஸ்தான் செல்லும் என்றும் கூறப்பட்டது.


இந்நிலையில் இந்திய அரசு அனுமதி கொடுத்தால்தான் இந்திய அணி பாகிஸ்தானுக்குச் செல்லும் என்று தகவல்கள் வெளியாகியிருந்தன. இதையடுத்து நேற்று இது பற்றிப் பேசிய பிசிசிஐ செயலாளர் ஜெய்ஷா, “ஆசியக் கோப்பை போட்டி பொதுவான இடத்தில் நடைபெறுவது வழக்கமான ஒன்று. அப்படி நடத்தினால் மட்டுமே இந்தியா பங்கேற்கும். நாங்கள் பாகிஸ்தானுக்குப் பயணம் செய்ய மாட்டோம் என்று முடிவு செய்துள்ளோம்” என்று கூறியிருந்தார்.


இந்நிலையில் ஜெய் ஷாவின் இந்த அறிவிப்புக்குப் பதிலளிக்கும் வகையில் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில், “ஜெய் ஷாவின் அறிக்கை ஒரு தலைபட்சமாக உள்ளது. இதுபோன்ற அறிக்கைகளின் தாக்கம் ஆசிய மற்றும் சர்வதேச கிரிக்கெட்டைப் பிளவுபடுத்தும். இந்த முடிவு எதிர்காலத்தில் இந்தியாவில் நடைபெறவிருக்கும் ஐசிசி தொடர்களுக்கு பாகிஸ்தான் அணி வருகை தருவதைப் பாதிக்கலாம். 2023 ஐசிசி கிரிக்கெட் உலகக் கோப்பை மற்றும் 2024-2031 வரையில் இந்தியாவில் நடைபெறவிருக்கும் ஐசிசி நிகழ்வுகள் போன்றவையும் இதனால் பாதிக்கப்படும். 


ஆசியக் கோப்பை 2023 தொடரில் பங்கேற்க இந்திய அணி பாகிஸ்தானுக்கு வரவில்லை என்றால், நாங்கள் இந்தியாவில் நடைபெறும் 2023 ஒருநாள் உலகக் கோப்பை தொடரில் பங்கேற்க மாட்டோம்’’ என்று திட்டவட்டமாகக் கூறியுள்ளது பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad

*/