முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுடன் தூத்துக்குடி எம்.பி கனிமொழி சந்திப்பு. - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

வியாழன், 6 அக்டோபர், 2022

முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுடன் தூத்துக்குடி எம்.பி கனிமொழி சந்திப்பு.

மத்திய அரசின் ஊரக வளர்ச்சி மற்றும் பஞ்சாயத்ராஜ் நிலைக்குழுவின் உறுப்பினர்களை நியமனம் செய்து மத்திய அரசு அறிவிப்பு வெளியிட்டது. அதன்படி, மக்களவை உறுப்பினர்கள் 17 பேரும், மாநிலங்களவை உறுப்பினர்கள் 10 பேரும் மத்திய அரசின் ஊரக வளர்ச்சி மற்றும் பஞ்சாயத்ராஜ் நிலைக்குழுவின் உறுப்பினர்களாக நியமனம் செய்யப்பட்டனர்.


இதன்படி மத்திய அரசின் ஊரக வளர்ச்சி மற்றும் பஞ்சாயத்ராஜ் நிலைக்குழுவின் தலைவராக திமுக மகளிரணி செயலாளரும், தூத்துக்குடி திமுக மக்களவை உறுப்பினருமான கனிமொழி நியமனம் செய்யப்பட்டுள்ளார். இதற்கான அறிவிப்பை மத்திய அரசு வெளியிட்டிருந்தது.


இந்நிலையில்  ஊரக வளர்ச்சி மற்றும் பஞ்சாயத்து ராஜ் குழுவின் தலைவராக நியமிக்கப்பட்டதை அடுத்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை, கனிமொழி வாழ்த்து பெற்றார். 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad