மீன்வளத்துறை அதிகாரியை மிரட்டிய திமுக பிரமுகர் கைது. - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

வியாழன், 6 அக்டோபர், 2022

மீன்வளத்துறை அதிகாரியை மிரட்டிய திமுக பிரமுகர் கைது.

கைது செய்யப்பட்ட அந்தோனி ராய்

மீன்வளத்துறை அதிகாரியை பணி செய்யவிடாமல் தடுத்ததாக திமுக பிரமுகர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். நெல்லை மாவட்டம் திசையன்விளை அருகே உள்ள உவரியில் சுருக்குமடி வலையை பயன்படுத்தி மீன்கள் பிடிப்பதாக மீன்வளத்துறை அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது.


அதன்பேரில் ராதாபுரம் மீன்வளத்துறை ஆய்வாளர் உத்திராண்டு ராமன் மற்றும் உவரி காவல் துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று சுருக்குமடி‌ வலையில் பிடித்த மீன்களை பறிமுதல் செய்தனர்.


அப்போது அங்கு வந்த பரதர் உவரியை சேர்ந்த திமுக. நிர்வாகியும், உவரி மீனவர் கூட்டுறவு சங்க முன்னாள் தலைவருமான அந்தோணி ராய் (வயது 43) என்பவர் உத்திராண்டு ராமனிடம் தகராறு செய்தார். அவரை பணி செய்ய விடாமல் தடுத்து அவதூறாக பேசி, மிரட்டல் விடுத்தார்.


இதுதொடர்பான வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் பரவியது. இதுகுறித்து மீன்வள ஆய்வாளர் உவரி காவல் நிலையத்தில் புகார் அளித்ததன் பேரில் ஆய்வாளர் பிரேமா ஸ்டாலின் விசாரணை நடத்தினார். அதில் அவர் அரசு பணியை செய்ய விடாமல் அதிகாரிகளுக்கு கொலை மிரட்டல் விடுத்தது உறுதியானது. இதையடுத்து அவர்மீது 353-அரசு பணியை செய்யவிடாமல் தடுத்தல், 294(பி)-அவதூறாக பேசுதல், 506(2)-கொலை மிரட்டல் விடுத்தல் ஆகிய 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்தார்.


இதனை அறிந்த அந்தோணி ராய் தலைமறைவானார். அவரை காவல் துறையினர் தீவிரமாக தேடி வந்த நிலையில் நேற்று இரவு அவர் கைது செய்யப்பட்டார். தொடர்ந்து அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad