கராத்தே தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு வண்ண பட்டை வழங்கும் நிகழ்ச்சி. - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

திங்கள், 24 அக்டோபர், 2022

கராத்தே தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு வண்ண பட்டை வழங்கும் நிகழ்ச்சி.

செங்கல்பட்டு மாவட்டம் வண்டலூரை அடுத்த கொளபக்கம் தனியார் திருமண மண்டபத்தில் ஓக்கினோவா ஷெரின் ரியோ கராத்தே பயிற்சி பள்ளி சார்பாக கராத்தே பயிற்சியில் தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கு வண்ண பட்டைகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சி ஆசியாவின் முதல் சிகப்பு பட்டை (ரெட் பெல்ட்) சாதனையாளர் ஹன்சி. ராஜாமணி (10th Dan) அவர்கள் தலைமையில் நடைபெற்றது, இதில் ஓரகடம், படப்பை, பெருங்களத்தூர், கொளபாக்கம் போன்ற பகுதிகளில் இயங்கும் கராத்தே பயிற்சி பள்ளி மாணவ, மாணவிகள் சுமார் 150க்கும் மேற்பட்டவர்கள் கலந்துகொண்டனர், அவர்களுக்கு ரென்ஷி. தனசேகரன் (6th Dan) அவர்கள் வண்ண பட்டைகள் மற்றும் சான்றிதழ்களை வழங்கினார்.

இந்த நிகழ்வில் கியோஷி. Dr. அருண் (8th Dan), ரென்ஷி. பன்னீர்செல்வம் (6th Dan), ரென்ஷி. மாரி (6th Dan), மூத்த சென்சாய்க்கள் ராஜா, சௌமிநாராயணன், ராஜசேகர், பூபதி, ரஜினிகாந்த் மற்றும் பயிற்சியாளர்கள் கலந்துகொண்டனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad