ஆந்திர மாநிலம், திருப்பதி, எஸ்.ஆர்.புரம் வடமாலாபேட்டை தேசிய நெடுஞ்சாலையிலுள்ள சுங்கச்சாவடியில் கட்டணம் செலுத்தும் பாஸ்டேக் முறை பழுதாக இருப்பதாகக்கூறி, அதற்குப் பதிலாக இரு மடங்கு சுங்கக்கட்டணத்தைப் பணமாக செலுத்தக்கூறியதை எதிர்த்துக் கேள்வி கேட்டதற்காக தமிழர்களை இழிவாகப் பேசியும், தமிழக வாகனங்களை அடித்து உடைத்தும், பெண்கள், முதியவர்கள் எனப் பாராது தமிழகத்தைச் சேர்ந்த பொதுமக்கள், ஆந்திர சட்டக்கல்லூரிகளில் படிக்கும் தமிழகத்தைச் சேர்ந்த மாணவர்கள் ஆகியோர் மீது ஆயுதங்களைக் கொண்டு கோரத்தாக்குதல் நடத்தினர்.

இந்த தாக்குதலை கண்டித்து தமிழ்நாடு இளம் வழக்கறிஞர்கள் சங்கத்தின் சார்பாக நிறுவனர் காசி.புதிய ராஜா தலைமையில் திருப்பதி SP.பரமேஸ்வர ரெட்டி அவர்களை சந்தித்து, ஆந்திர மாநிலம் வடமலைப்பேட்டை சுங்கசாவடியில் ஏற்பட்ட சட்டக் கல்லூரி மாணவர்கள் மீதும் அவர்களுடைய வாகனங்கள் மீதும் கொலை வெறி தாக்குதல் நடத்திய சுங்கச்சாவடி ஊழியர்களை கைது செய்ய வலியுறுத்தி நேரில் சந்தித்து வலியுறுத்தினர்.
இதில் சுங்கச்சாவடி ஊழியர்கள் சுமார் 50 நபர்களை காவல் துறை கைது செய்து விசாரணை செய்து வருகின்றது. இன்று மாலைக்குள் உண்மை நிலை அறிந்து வழக்கு பதிவு செய்யப்பட்டு இரு தரப்பினர் மீதும் நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தார்கள்.இந்த நிகழ்வில் மாநில பொதுச் செயலாளர் திருமதி. நிஷா, மாநில பொதுச் செயலாளர் பிரவீன், மாநில செய்தி தொடர்பாளர் ஆவடி.பி.பிரசாந்த் ஆகியோர் உடனிருந்தனர்.
.jpeg)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக