சென்னை பல்லாவரத்தில் திருச்சி சென்னை தேசிய நெடுஞ்சாலையில் கீதா கஃபே என்ற சைவ ஹோட்டல் உள்ளது. நேற்று மதியம் இந்த ஓட்டலுக்கு அதே பகுதியை சேர்ந்த முருகன் என்பவர் மதிய உணவு சாப்பிட சென்றார். முழு சாப்பாடு ஆர்டர் கொடுத்த அவர் சாம்பார் சாப்பிட்டு முடித்ததும் காரக்குழம்பு போட்டுக் கொண்டார்.
சாப்பாடை பிசைந்த போது ஏதோ ஒரு பொருள் தட்டுப்படவே அதை கையில் எடுத்து பார்த்து திடுக்கிட்டார். அவர் கையில் காது குடையும் பட்ஸ் ஒன்று காரக்குழம்பில் கிடந்தது தெரிய வந்தது. அதிர்ச்சி அடைந்த வாடிக்கையாளர் முருகன் இது குறித்து ஓட்டல் உரிமையாளர் மணிகண்டன் என்பவரிடம் புகார் தெரிவித்தார்.
அதைக் கேட்ட உரிமையாளர் எடுத்து போட்டுட்டு சாப்பிட்டு போ என்று அலட்சியமாக பதில் தெரிவித்தார். இதனால் கடுப்பான வாடிக்கையாளர் முருகன் இதுகுறித்து உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகளிடம் புகார் தெரிவித்துள்ளார். அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக