பிரதமர் மோடிக்கு பெண்கள் ஆணைய தலைவர் கடிதம்; பலாத்கார குற்றவாளிகளுக்கு விடுதலை, பரோல் கூடாது. - தமிழக குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

ஞாயிறு, 30 அக்டோபர், 2022

பிரதமர் மோடிக்கு பெண்கள் ஆணைய தலைவர் கடிதம்; பலாத்கார குற்றவாளிகளுக்கு விடுதலை, பரோல் கூடாது.

பிரதமர் மோடிக்கு பெண்கள் ஆணைய தலைவர் கடிதம்; பலாத்கார குற்றவாளிகளுக்கு விடுதலை, பரோல் கூடாது: வலுவான சட்டங்கள், கொள்கைகளை மாற்றியமைக்க வலியுறுத்தல்


புதுடெல்லி: பலாத்கார குற்றவாளிகள் விடுதலை,  பரோலை தடுப்பதற்கு சட்டங்கள், கொள்கைகளை வலுவாக மாற்றி அமைக்கும்படி பிரதமர் மோடிக்கு பெண்கள் ஆணைய  தலைவி கடிதம் எழுதியுள்ளார். குஜாரத்தில் 2002ம் ஆண்டு நடந்த கோத்ரா ரயில் எரிப்பு சம்பவத்தை தொடர்ந்து ஏற்பட்ட கலவரத்தின் போது பில்கிஸ் பானு என்ற 21 வயது இளம்பெண் கூட்டு பலாத்காரம் செய்யப்பட்டு, அவருடைய 3 வயது மகள் உட்பட 7 குடும்ப உறுப்பினர்களை ஒரு கும்பல் கொடூரமாக கொன்றது. இந்த வழக்கில் 11 பேருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது.


கடந்த ஆகஸ்ட் மாதம் சுதந்திர தினத்தை முன்னிட்டு இந்த 11 பேரும் விடுதலை செய்யப்பட்டனர். இதேபோல்,  பாலியல் பலாத்காரம், கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்டு ஆயுள் தண்டனை அனுபவித்து வரும் தேரா சச்சா சவுதா தலைவர் குர்மீத் ராம்  ரஹீமை அரியானா அரசு சமீபத்தில் பரோலில் விடுவித்தது. இந்நிலையில், டெல்லி பெண்கள் ஆணையத்தின் தலைவி ஸ்வாதி மாலிவால், பிரதமர் மோடிக்கு எழுதியுள்ள கடிதத்தில், ‘நாட்டில் தற்போதுள்ள பரோல், விடுதலை சட்டங்கள் மிகவும் பலவீனமாக உள்ளன.


பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான பலாத்காரம், கொலை, கடத்தல், ஆசிட் வீச்சு போன்ற கொடூரமான குற்றங்களில் குற்றவாளிகளின் தண்டனையை குறைக்க அனுமதிக்கக் கூடாது. அதற்கு ஏற்ற வகையில் வலுவான சட்டங்கள், கொள்கைகளை மாற்றி அமைக்க வேண்டும். அரிதான வழக்குகளில் கடுமையான நிபந்தனைகளுடன் சில நாட்களுக்கு மட்டுமே பரோல் வழங்கப்பட வேண்டும்,’ என்று கூறியுள்ளார். 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad

*/