இரண்டாம் ஆண்டு செலுத்த முடியாமல் போராடி வந்திருக்கிறார். உதவும் கைகள் குழும் இடம் ரூ 36,000 செலுத்த வேண்டும் அரசு கல்லூரியில் கட்டணம் மிக மிக குறைவு. உயர்கல்வித்துறை எந்த நிலையில் இருக்கிறது என்பதை அவரால் உணர முடியவில்லை. தன்னைப்போல் தன்மகள் கஷ்டப்படக்கூடாது, என்ற ஒரே சிந்தனையில் தனியார் கல்லூரியில் கொண்டு போய் சேர்த்திருக்கிறார்.
இவருக்கு எப்படியாவது உதவி செய்ய வேண்டும் என்ற நோக்கில் புரசை வெங்கடேசன் அவர்கள் நண்பர்களிடம் இந்த தகவலை பகிர்ந்தார்கள். மனிதநேயர் திரு. முத்துவேல் (திருவேற்காடு) ரூபாய் 28 ஆயிரம் வழங்கினார். மனிதநேயர். திரு. லிங்கேஸ்வரன் (தியாகராய நகர்) ரூபாய் ஐந்தாயிரம் வழங்கினார்.
திருவள்ளூரை சேர்ந்த பெயர் குறிப்பிட விரும்பாத மனிதநேயர் மூவாயிரம் வழங்கினார். அந்த கல்லூரியின் செயலாளர் திரு தேவ் ஆனந்த் அவர்களை சந்தித்தேன். நம்மைப் பற்றிய முழு விவரங்களை தெரிவித்து, கட்டணத்தை குறைக்க முடியுமா? என்று கேட்டேன். நல்ல மனிதர்.தேர்வு கட்டணத்தை செலுத்தச் சொல்லிவிட்டு கல்லூரிக்கான கட்டணத்தில் 3 ஆயிரத்தை குறைத்துக் கொண்டார்.
அந்த ரூபாய் 3000 ல் அந்த மாணவிக்கு தேவைப்பட்ட கல்லூரி பை, லஞ்ச் பேக், காலணிகள் உள்ளிட்ட பொருட்களை வாங்கி கொடுத்தோம். மனிதநேயர் பாலசுப்பிரமணிய ஐயா உடன் வந்து மிகவும் உதவிகரமாக இருந்தார். கல்லூரியில் பணம் செலுத்தி விட்டு, மாணவிக்கு தேவைப்பட்ட பொருட்களையும் வாங்கிக் கொண்டு அந்த துப்புரவு பெண் தொழிலாளியின் வீட்டுக்கு நாங்கள் சென்றபோது, இப்படி ஒரு உதவி கிடைக்கும் என்பதை அவரால் நம்ப முடியவில்லை.
அவர் கண்களில் இருந்து நீர் பெருக்கெடுத்தது. உதவி செய்த மூன்று மனித நேயர்களுக்கும் நன்றியை தெரிவித்துக் கொண்டார்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக