தமிழக பத்திரிகையாளர் சங்கத்தின் நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் ஒரத்தநாட்டில் மிகவும் சிறப்பாக நடைபெற்றன.
தமிழக பத்திரிகையாளர் சங்கத்தின் மாநில தலைவர் ஹரிஹரன், பொதுச் செயலாளர் பாட்ஷா, மத்திய மண்டல தலைவர் சிவராமகிருஷ்ணன் ஆகியோரின் அறிவுறுத்தலின் படி தமிழக பத்திரிகையாளர்கள் சங்கத்தின் நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் ஒரத்தநாட்டில் நடைபெற்றன. இந்த கூட்டத்திற்கு மாவட்ட தலைவர் ஞான. பாஸ்கரன் தலைமை வகித்தார். மாவட்ட செயலாளர் ராஜேஷ் முன்னிலை வகித்தார். மாவட்டத் துணைத் தலைவர் பிரபாகரன் வரவேற்றார். கூட்டத்தில் கலந்து கொண்ட அனைத்து நிர்வாகிகள் மற்றும் புதிய உறுப்பினர்களுக்கு ஒரத்தநாடு தாலுகா தலைவர் துரைச்செல்வன் பொன்னாடை போர்த்தி சிறப்பு செய்தார்.
கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்:
- ஒரத்தநாடு தாலுகா தலைவராக துரைச்செல்வன், செயலாளராக ஸ்டாலின், பொருளாளராக ரமேஷ் ஆகியோர் மாநில தலைவர் ஹரிஹரன், பொதுச் செயலாளர் பாட்ஷா, மத்திய மண்டல தலைவர் சிவராமகிருஷ்ணன் ஆகியோர்கள் அறிவுறுத்தலின் படி நியமிக்கப்பட்டார்கள்.
- சங்கத்தின் கோரிக்கைகளை மாவட்ட கலெக்டரை நேரில் சந்தித்து வலியுறுத்துவது.
- சங்கத்தின் அடுத்த கூட்டத்தை கும்பகோணத்தில் நடத்துவது.
- தாலுகா அளவில் உள்ள சங்க உறுப்பினர்களுக்கு வீட்டுமனைப் பட்டா மற்றும் அரசு தனியார் பேருந்துகளில் பயணம் செய்ய இலவச பேருந்து அட்டை பெற்றுத் தர மாவட்ட கலெக்டரிடம் வலியுறுத்துவது.
- சங்கத்தின் வளர்ச்சிக்கு புதிய உறுப்பினர்களை அதிகமாக சேர்ப்பது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
முன்னதாக சங்கத்தில் புதியதாக சேர்ந்த உறுப்பினர்களுக்கு சிறப்பு செய்யப்பட்டது. முடிவில் சங்கத்தின் மாவட்ட அமைப்பாளர் முனியசாமி நன்றி கூறினார்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக