அமெரிக்கப் படைத்தளம் அதிர்ந்தது சிரியாவில் திடீர்த் தாக்குதல் - தமிழக குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

புதன், 12 அக்டோபர், 2022

அமெரிக்கப் படைத்தளம் அதிர்ந்தது சிரியாவில் திடீர்த் தாக்குதல்


டமாஸ்கஸ், அக்.12- சிரியாவில் சில பகுதிகளை ஆக்கிர மித்து அமைக்கப்பட்டுள்ள பல்வேறு அமெரிக்கப் படைத்தளங்களில் ஒன்றின் மீது தாக்குதல் நடத்தப்பட்டதாக அமெரிக்க மத்தியப் படைத் தலைமை யகம் அறிவித்துள்ளது. 

சிரியா மற்றும் இராக் எல்லைகள் வழி யாக சிரியாவின் எண்ணெய் கடத்தப்படு வதாகக் குற்றச்சாட்டு இருந்து வருகிறது. 

உலக அரங்கில் இந்தக் குற்றச்சாட்டை வெளிப்படையாகவே சிரியா சுமத்தி யுள்ளது. இந்தக் கடத்தலுக்கு ஆக்கிர மிப்பு செய்துள்ள அமெரிக்கப் படைகள் உதவி செய்கின்றன. 

ஐந்தில் நான்கு பங்கு அளவிலான எண்ணெய் வளம் கொள்ளை யடிக்கப்படுவதாகவும், சிரியாவின் பொருளாதாரத்தை இந்தக் கொள்ளை பெருமளவு சேதப்படுத்துவதாகவும் சிரிய அரசு கூறியுள்ளது. 

இந்நிலையில், சட்டவிரோதமாக அமைக்கப்பட்டுள்ள அமெரிக்க படைத்தளமொன்றின் மீது ராக்கெட் வீசப்பட்டது.

இதை உறுதி செய்துள்ள அமெரிக்க ராணுவம், இந்தத் தாக்கு தலில் உயிரிப்புகள் எதுவும் ஏற்பட வில்லை என்று கூறியுள்ளது. தேடுதல் வேட்டையில் உடனடியாக அமெரிக்க ராணுவம் ஈடுபட்டது. 

ராக்கெட் ஏவிய இடத்தைக் கண்டுபிடித்து அங்கு சென்ற போது, ஏவுவதற்காக மேலும் பல ராக் கெட்டுகள் அங்கு வைக்கப்பட்டிருந்தன என்பது கண்டுபிடிக்கப்பட்டது. 

அண்மைக்காலத்தில் கொள்ளை யடிப்பதை அமெரிக்கா தீவிரப்படுத்தி யது என்று குற்றம் சாட்டியுள்ள சிரிய வெளியுறவுத்துறை, அரசு எதிர்ப்பாளர் களுடன் கைகோர்த்து செயல்படுகிறது என்று சுட்டிக்காட்டியுள்ளது. 

ஆனால், அமெரிக்கப் படைத்தளம் மீது ராக்கெட் வீசியது யார் என்பது குறித்து சிரிய ராணு வமோ அல்லது அரசாங்கமோ இதுவரை யில் எந்தவிதக் கருத்தையும் தெரிவிக்க வில்லை.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad

*/