தமிழகம் முழுவதும் பல்வேறு அரசு அலுவலகங்களில் லஞ்ச ஒழிப்பு போலீசார் அதிரடி சோதனையில் ஈடுபட்டுள்ளனர். வட்டாட்சியர் அலுவலகம், கோட்டாட்சியர் அலுவலகம், வட்டார போக்குவரத்து அலுவலகம், டாஸ்மாக் மண்டல மேலாளர் அலுவலகம், நெடுஞ்சாலை துறை அலுவலகம் என பல்வேறு அலுவலங்களிலும் இந்த சோதனையானது நடைபெற்று வருகிறது.
தீபாவளி பண்டிகை நெருங்கி வருவதை ஒட்டி அரசு ஊழியர்கள் பரிசுப் பொருட்கள் பெறுவதை தடுக்கும் விதமாக இந்த சோதனை நடத்தப்படுவதாக தெரிய வருகிறது.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக