இந்தியை திணிக்கும் மத்திய பாஜக அரசை கண்டித்து மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம். - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

ஞாயிறு, 16 அக்டோபர், 2022

இந்தியை திணிக்கும் மத்திய பாஜக அரசை கண்டித்து மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்.

மத்திய அரசின் ஹிந்தி திணிப்புக்கு எதிராக திமுக மாணவரணி சார்பாக நேற்று காலை 10 மணியளவில் செங்கல்பட்டு பேருந்து நிலையம் அருகே ஒன்றிய அரசு காஞ்சிபுரம் வடக்கு மாவட்ட திமுக இளைஞரணி மற்றும் மாணவரணி சார்பில்  இந்தியை திணிக்கும் மத்திய பாஜக அரசை கண்டித்து மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சியில் மாங்காடு நகர மன்ற துணை தலைவர், நகர கழக செயலாளர் மனிதநேயர் பட்டூர் எஸ் ஜபருல்லா தலைமை வகித்தார், நகர இளைஞர் அணி அமைப்பாளர் ஆர்.சாரதி, நகர மன்ற உறுப்பினர் ஏழாவது வார்டு டி பெருமாள்ராஜ், நகர மாணவர் அணி அமைப்பாளர் எம். வல்லரசு, மாங்காடு நகர கழக நிர்வாகிகள் அணிகளின் அமைப்பாளர்கள், துணை அமைப்பாளர், மாவட்ட ஒன்றிய பிரதிநிதிகள், வார்டு செயலாளர்கள், நகர மன்ற உறுப்பினர்கள், இளைஞர் அணி, மாணவர் அணி மற்றும் ஏராளமான திமுகவினர் கலந்து கொண்டனர்.


- தமிழக குரல் செய்திகளுக்காக காஞ்சிபுரம் மாவட்ட செய்தியாளர் மாங்காடு பாலாஜி.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad