மாங்காடு நகராட்சியில் தமிழக தலைமை செயலாளர் இறையன்பு IAS ஆய்வு. - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

ஞாயிறு, 30 அக்டோபர், 2022

மாங்காடு நகராட்சியில் தமிழக தலைமை செயலாளர் இறையன்பு IAS ஆய்வு.

தமிழக அரசு தலைமை செயலாளர் இறையன்பு, I.A.S அவர்கள் காஞ்சிபுரம் மாவட்டம் ஆட்சியர் ஆர்த்தி நகராட்சி இயக்குனர்  திரு.பொன்னையன்.I.A.S அவர்கள் மாங்காடு நகராட்சிக்கு உட்பட்ட மழை நீர் வடிகால் மற்றும் புதியதாக அமைய இருக்கின்ற நகராட்சி மன்ற அலுவலகம் ஆகியவற்றை 29/10/2022 அன்று காலை ஆய்வு மேற்கொண்டார்.

பின்னர் பொதுமக்களுக்கு எவ்வித இடஞ்சலும் இல்லாமல் பாதுகாப்புடன் பணிகளை நடப்பதை உறுதி செய்து கொண்டு தலைமை செயலாளர் இறையன்பு அதிகாரிகளை வெகுவாக பாராட்டி அப்பணிகளை விரைந்து முடிக்குமாறு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.


இந்நிகழ்வில் மாங்காடு நகர மன்ற தலைவர் சுமதி முருகன், மாங்காடு நகர கழக செயலாளரும் நகர மன்ற துணை தலைவர் பட்டூர் எஸ் ஜபருல்லா, மாங்காடு நகராட்சி ஆணையர் திருமதி.ரா.சுமா, நகராட்சி  பொறியாளர் திருமதி நளினி மற்றும் காவல்துறை உயர் அதிகாரிகள், நகர மன்ற  உறுப்பினர்கள் ஆகியோர் ஆய்வின் போது கலந்து கொண்டனர்.


- தமிழக குரல் செய்திகளுக்காக  காஞ்சிபுரம் மாவட்டம் செய்தியாளர் மாங்காடு பாலாஜி

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad