கேரள மாநிலம் இடுக்கி மூணாறு பகுதியில் விவசாய பயிர்களை அழித்த காட்டு யானை. - தமிழக குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

வியாழன், 17 நவம்பர், 2022

கேரள மாநிலம் இடுக்கி மூணாறு பகுதியில் விவசாய பயிர்களை அழித்த காட்டு யானை.

கேரள மாநிலம் இடுக்கி மூணாறு பகுதியில் விவசாய பயிர்களை அழித்த காட்டு யானை.  தொடரும்காட்டு யானைகளின்  அட்டகாசத்திலிருந்து பாதுகாப்பு அளிக்க பொதுமக்கள் கோரிக்கை. 


கேரள மாநிலம் இடுக்கி மாவட்டத்திற்கு உட்பட்ட மூணாறு பகுதியில் அமைந்துள்ள தலையாறு எஸ்டேட்டினுள்  புகுந்த காட்டு யானை ஒன்று ஒரு மணி நேரத்திற்கு மேலாக அங்குள்ள வாழை உள்ளட்ட விவசாய பயிர்களை அழித்தது.  அங்குள்ள தொழிலாளர்களின் நீண்ட நேர முயற்சிக்குப் பின்னர் அங்கிருந்து புறப்பட்டது. 


சில நாட்களுக்கு முன்பு ஈகோ பாய்ண்ட்  அருகே சாலையில் நின்று கொண்டு வாகனப் போக்குவரத்துக் இடையூறு ஏற்படுத்திய காட்டு யானையால் அப்பகுதியில் காணப்பட்ட சுற்றுலா பயணிகளும் வியாபாரிகளும் பொதுமக்களும் சிரமத்தை சந்தித்தனர்.  


சமீப நாட்களாக மூணாறு பகுதியில் காட்டு யானைகள் குடியிருப்பு பகுதிகளிலும் சாலைகளிலும் புகுந்து பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்துவதால் வனத்துறையினர், இப்பிரச்சனையில் தலையிட்டு தீர்வு ஏற்படுத்த வேண்டும் என பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர் 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad

*/