ஆசியாவின் "டெட்ராய்டு" சாலையின் அலங்கோலம்; நடவடிக்கை எடுக்குமா அரசு? - தமிழக குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

புதன், 16 நவம்பர், 2022

ஆசியாவின் "டெட்ராய்டு" சாலையின் அலங்கோலம்; நடவடிக்கை எடுக்குமா அரசு?


ஆசியாவின் டெட்ராய்டு என அழைக்கப்படும் "ஒரகடம்" தொழிற்சாலைகள் நிறைந்த பகுதியான இது காஞ்சிபுரம் மாவட்டத்தில் அமைந்துள்ளது, இங்கு நூற்றுக்கணக்கான வாகன தொழிற்சாலைகள் அமைந்துள்ளது மற்றும் விரைவில் வான்வெளி தொழிநுட்ப பூங்கா, மருத்துவ பூங்கா போன்றவை இங்கு அமைய உள்ளது குறிப்பிடத்தக்கது.

ஓரகடத்திலிருந்து சென்னை, தாம்பரம் போன்ற இடங்களுக்கு செல்ல பயன்படுத்தும் சாலையில் தினமும் ஆயிரக்கணக்கான தொழிற்சாலை பேருந்துகளும், கனரக வாகனங்களும், இலட்சக்கணக்கான தொழிலாளர்களும் பயணிக்கின்றனர். இந்த சாலை ஒவ்வொரு மழை காலங்களிலும் குண்டும் குழியுமாக மாறிவிடுகிறது, நெடுஞ்சாலை துறையும் இதனை கண்டும் காணாமலும் உள்ளது.

குறிப்பாக சர்வதேச வாகன ஆராய்ச்சி மையம் முதல் ஜான்சன்ஸ் லிப்ட் தொழிற்சாலை வரை சாலை மிகவும் மோசமாக உள்ளது, இதனால் அடிக்கடி சாலை விபத்துகளும் ஏற்படுகிறது, குறிப்பாக மழை காலங்களில் வாகன ஓட்டிகள் மிகப்பெரிய சிரமத்தை சந்திக்கின்றனர். தினசரி ஆயிரக்கணக்கான வாகனங்களும், இலட்சக்கணக்கான பொதுமக்களும் பயன்படுத்தும் சாலையை நெடுஞ்சாலை துறை உடனடியாக சீரமைக்க வேண்டும் மேலும் சாலையில் மின் விளக்குகளை அமைக்க வேண்டும் எனவும் தொழிலாளர்களும் வாகன ஓட்டிகளும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

  

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad

*/