காஞ்சிபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் Dr.M.சுதாகர் அவர்கள் மழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உணவு பொருட்கள் மற்றும் அத்தியாவசிய பொருட்கள் வழங்கினார்.
காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட ஆணைப்பள்ளம் மற்றும் காக்க நல்லூர் கிராமத்தில் மழையால் பாதிக்கப்பட்ட 41 நபர்கள் பாதுகாப்பாக பாப்பாங்குளத்தில் உள்ள அரசினர் ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் தங்கவைத்துள்ளனர்.
அவர்களை காஞ்சிபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் Dr.M.சுதாகர் அவர்கள் நேரில் சென்று பார்வையிட்டு அவர்கள் அனைவருக்கும் அத்தியாவசிய உணவு பொருட்கள் மற்றும் போர்வை வழங்கினார். காஞ்சிபுரம் உட்கோட்ட துணை காவல் கண்காணிப்பாளர் ஜூலியஸ் சீசர் மற்றும் உத்திரமேரூர் ஆய்வாளர் விஜயகுமார் அவர்கள் உடன் இருந்தனர்.


கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக