காஞ்சிபுரம் மாவட்டம், பரணிபுத்துர் ஊராட்சிக்கு உட்பட்ட ஆண்டவர் நகர் பிள்ளையார் கோயில் தெரு காந்தி தெரு பாரதியார் தெரு மற்றும் இதை சுற்றி உள்ள பகுதிகளில் மழை நீர் குளம் போல் காட்சியளிக்கும் சாலைகள் 500க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்துவருகின்றனர்.
அன்றாட பணிகளுக்கு வெளியே செல்ல முடியாமல், குழந்தைகளுக்கு பால் போன்ற அத்தியாவசிய பொருட்கள் வாங்க முடியாமல் தவிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. கடந்த சில நாட்களாக பெய்த வடகிழக்கு பருவமழையால் இப்பகுதியில் ஜந்து நாட்களாக தண்ணீர் தேங்கி நிற்கிறது, ஊராட்சி மன்ற தலைவர் வார்டு உறுப்பினர்கள் யாரும் இதுவரை வந்து பார்க்க வில்லை என அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டுகின்றனர், எனவே ஊராட்சி நிர்வாகம் உடனடியாக நடவடிக்கை எடுத்து தெண்ணீர் தேங்குவதை தடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
- செய்தியாளர் S.தமிழ் செல்வன்.

.jpg)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக