காஞ்சிபுரம் மாவட்டம் அய்யப்பன்தாங்கல் ஊராட்சிக்கு உட்பட்ட பரணிபுத்தூர் பழைய சர்குரு பள்ளி அருகில் பிரதான சாலையில் அமைந்துள்ள மின் கம்பம் கிழே சாயும் நிலையில் உள்ளது, இந்த சாலையில் மக்கள் தினமும் பயணம் செய்கின்றனர், இந்த மின் கம்பம் தற்போது பருவமழை என்பதால் இதை சுற்றி மழைநீர் தேங்கியுள்ளது.
பரணிப்பூத்துர் மின் வாரிய ஊழியர்கள் இந்த ரோட்டில் தான் தினமும் பயணம் செய்கின்றனர், இதை கண்டும் காணாமல் அவர்கள் செல்வதாக அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டுகின்றனர், பொதுமக்கள் உயிருக்கு ஆபத்தை விளைவிக்கும் நிலையில் உள்ள இந்த மின் கம்பத்தை சீரமைக்க மின் வாரியம் உடனடியாக நடவடிக்கை எடுக்குமா? என அப்பகுதி மக்கள் எதிர்பார்த்துள்ளனர்.


கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக