
சாலைகளில் ஏற்பட்ட திடீர் ஆறு, குளங்களால் பொதுமக்கள் நீந்தி செல்கின்ற சூழ்நிலை உருவாகியுள்ளது. சாலைகளில், உள்ள தண்ணீரில் மூழ்கி இருசக்கர வாகனங்கள் பழுது ஏற்படுகின்றன. நடந்து செல்பவர்களுக்கு, நீச்சல் குளத்தில் செல்வது போல் தோன்றுகிறது. அதிகாரிகள் காரில் செல்வதால் அவர்களுக்கு பொதுமக்களின் கஷ்டங்கள் தெரிவதில்லையோ என கேள்விகள் எழுகின்றன.
இது மாவட்ட நிர்வாகத்தின் திறமையின்மையை காட்டுகின்றது. இதேபோல், மதுரை மாநகரில் பலத்த மழையால், சாலைகளில் மழைநீர் குளம் போல தேங்கியுள்ளன. மதுரை அண்ணாநகர் மேலமடை, தாசில்தார் நகர், வண்டியூர், கோமதிபுரம், ஜீப்பிலி டவுன் ஆகிய பகுதிகளில் சாலைகளில், மழைநீர் குளம் போல தேங்கியுள்ளன.
தாழைவீதி, ராஜராஜன் தெரு, வீரவாஞ்சி தெரு, மருதுபாண்டியர் தெரு, ஜீப்பிலி டவுன், தாழைவீதி, குருநாதன் தெருக்கள் குளம் போல காணப்படுவதால், பாதசாரிகள், இரு சக்கர வாகனத்தில் செல்வோர் அவதியுறுகின்றனர். இது, குறித்து மதுரை மாநகராட்சி நிர்வாகத்தினர் உரிய நடவடிக்கை எடுக்க கோரியுள்ளனர்.


கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக